கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 9, 2023

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

9.7.2023

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்

👉ஆளுநர் அலுவலகத்தில் கோப்புகள் வந்தனவா என்று கூட தெரியாமல் ஆர்.என்.ரவி இருக்கிறாரா? என திமுக கேள்வி.

👉தேசியவாத காங்கிரஸ் கட்சியை புதுப்பிக்க மகாராட்டிரா முழுவதும் பயணம் மேற்கொள்ள சரத் பவார் முடிவு.

இந்தியன் எக்ஸ்பிரஸ்

👉கங்கை நீரால் கழுவப்பட்டு  மகாராட்டிராவில் ஊழல்வாதிகள் அமைச்சர்களாகிவிட்டனரா? என மோடியை சட்டீஸ்கர் முதலமைச்சர் பாகேல் கடுமையாக சாடியுள்ளார்.

👉பொது சிவில் சட்டத்திற்கு நிகரான கோவா குடும்ப சட்டம், கோவாவில் பெண்களுக்கு அநீதியை ஏற்படுத்தி யுள்ளது என்கிறார் வழக்குரைஞர் ஆல்பட்டினா அல்மீதா.

தி இந்து

👉மோடி அரசு கொண்டு வரும் தகவல் பாதுகாப்பு சட்டம், அரசாங்கத்திற்கும் அதன் அமைப்புகளுக்கும் விலக்கு அளிப்பது "பெரும் கவலையை" ஏற்படுத்துகிறது என்று நீதிபதி சிறீகிருஷ்ணா பேச்சு.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

👉 இங்கிலாந்து நாடாளுமன்றக் குழு அந்நாட்டு பிரதமர் சுனக்கைக் கேள்வி எழுப்புவது போல், இந்தியா 'ஜனநாயகத்தின் தாய்' என்று கூறும் பிரதமர் மோடியிடம் கேள்வி கேட்கும் வாய்ப்பு சாத்தியமற்றது என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் சாடல்.

👉 ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை அமல்படுத்துவது சிறுபான்மையினர் மீதான அடக்குமுறை என்கிறது சீக்கிய அமைப்பான எஸ்.பி.ஜி.சி.

டைம்ஸ் ஆப் இந்தியா:

👉தமிழ்நாட்டில் இன்டர்ன்ஷிப் உட்பட எம்.பி.பி.எஸ். முழு படிப்பையும் படித்தவர்கள் மட்டுமே மாநில ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பிக்கலாம் என்ற பிஜி-நீட் தேர்வில் கூறப்பட்டுள்ள விதிக்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தமிழ்நாட்டில் பிறந்து வெளி மாநிலத்தில் பட்டப்படிப்பு பெற்றவர்களும் விண்ணப் பிக்கலாம் என மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் உள்ள தேர்வுக் குழு சில விளக்கங்கள் அளித்துள்ளது. 

- குடந்தை கருணா


No comments:

Post a Comment