மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வேண்டுகோள்!
சென்னை, ஜூலை 13 - வன்மத் தோடு நிறுத்தப்பட்ட சிறு பான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை பெற மாநில அரசு முயற்சிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு அரசுக்கு வேண்டு கோள் விடுத்துள்ளது.
இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
சிறுபான்மை மாணவர்கள் கல்வி யில் பின்தங்கியுள்ள நிலையை கணக் கில் கொண்டு அய்க்கிய முற்போக்கு கூட்டணி_1 அரசு சச்சார் கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் சிறுபான்மை மாணவர்களுக்கான பல்வேறு கல்வி உதவித் தொகை களை உத்தரவாதப்படுத்தியது.
அதோடு புதிதாக, ஒன்றாம் வகுப்பு முதல் பயிலும் சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை அளித்தது. இது தவிர, மொத்த எண்ணிக்கையில் 30 சதவிகிதம் பேகம் ஹஸ்ரத் மஹால் பெயரில் மாணவிகளுக்கு ப்ரி மெட்ரிக் கல்வித் தொகையையும் அளித்து வந்தது.
இந்த நிலையில் ஒன்றிய பா.ஜ.க. அரசாங்கம் சிறுபான்மையினர் மீதான வன்மத்தோடு இந்தாண்டு முதல் 1 - 8ஆம் வகுப்பு மாணவர்களுக் கான கல்வி உதவித் தொகையை நிறுத்தியது. அதோடு, மவுலானா அபுல்கலாம் ஆசாத் ஃபெலோஷிப் பையும் வெளி நாட்டில் பயிலும் சிறுபான்மை மாணவர்கள் பெரும் கடனுக்கான வட்டிக்கு அளித்து வந்த மானியத்தையும் ரத்து செய்து விட்டது.
இந்த நிலையில் சிறுபான்மை மாணவர்களுக்கு தற்போது அம லில் உள்ளபடி, ப்ரி மெட்ரிக் ஸ்காலர்ஷிப், போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப், பேகம் ஹஸ்ரத் மஹால் ஸ்காலர்ஷிப், மெரிட் கம் மீன்ஸ் ஸ்காலர்ஷிப் உள்ளிட்ட எந்த உதவித்தொகையும் ஒன்றிய அரசாங்கத்திடமிருந்து இதுவரை வரவில்லை.
சிறுபான்மையினர் மீதான வன்மத்தினால் ஒன்றிய அரசாங் கம் நயவஞ்சகமாக சிறுபான்மை மாண வர்களின் கல்வியை பாதிக் கும் வகையில் இந்த உதவித் தொகைகளை நிறுத்தி வைப்பது வன்மையான கண்டனத்திற் குரியது.
ஒன்றிய அரசு உடனடியாக சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை வழங் கிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்து கிறது. மேலும், மாநில அரசு ஒன்றிய அரசின் உரிய அதிகாரிக ளோடு தொடர்பு கொண்டு இந்த கல்வி உதவித் தொகைகளை பெறு வதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment