தமிழ்நாட்டின் அனுமதி இல்லாமல் மேகதாதுவில் கருநாடக அரசு அணை கட்ட முடியாது அமைச்சர் துரைமுருகன் பேட்டி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 10, 2023

தமிழ்நாட்டின் அனுமதி இல்லாமல் மேகதாதுவில் கருநாடக அரசு அணை கட்ட முடியாது அமைச்சர் துரைமுருகன் பேட்டி

வேலூர், ஜூலை 10 -   மேகதாதுவில் கருநாடக அரசால் அணை கட்ட முடியாது என அமைச்சர் துரை முருகன் கூறினார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தி யாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

மேகதாது அணை கட்டுவோம் என கருநாடக அரசு கூறுவது அவர்களின் அரசியலுக்காகத்தான். அவர்களால் மேகதாது அணையை கட்ட முடியாது. காரணம் ஒன்றிய அரசிடம் அனுமதி பெற வேண்டும், சுற்றுச்சூழல்துறை, வனத்துறை, காவிரி நதி நீர் ஆணையம், எல்லா வற்றையும் விட தமிழ்நாடு அரசிடம் ஒப்புதல் பெற வேண்டும். அவ் வளவு சீக்கிரம் அணை கட்ட முடியாது.

நாங்களும் அணையை கட்ட விட மாட்டோம். ஒப்புதலும் தர மாட்டோம். நீதிமன்றம் செல்வோம்.  ஒரு போதும் கருநாடக அரசு மேகதாது அணை கட்ட தமிழ்நாடு அரசு அனுமதிக்காது. நாங்கள் ஒப்புக்கொள்ளவே மாட்டோம்.

தமிழ்நாட்டில் ஆறுகளில் சிறிய தடுப்பணைகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. பாலாற் றில் வெட்டுவாணம், சேண்பாக்கம், திருப்பாற்கடல், பசுமாத்தூர் உள் பட பல இடங்களில் ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டி வருகிறோம்.

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாட்டில் கனிம வளங்களில் அரசுக்கு ரூ.1,700 கோடி இழப்பு ஏற்பட்டது. நாங்கள் ஆட்சிக்கு வந்து ரூ.1,700 கோடி நட்டத்தை பூர்த்தி செய்து பல இடங்களில் சட்டத்திற்கு புறம்பாக கனிம வளத்தை வெட்டி எடுத்தவர்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் அபராதம் விதித்து சரி செய்துள்ளோம்.

எங்கள் ஆட்சியில் எந்தவித கனிமவள முறைகேடுகளும் நடக்க வில்லை. மகளிருக்கு உரிமைத் தொகை வழங்குவதில் எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டுவது உண் மையல்ல. யாருக்கு வழங்க வேண் டும் என எழுதிகொடுத்தால் வழங்குகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment