கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
1.7.2023
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* அமெரிக்க பல்கலைக்கழகங்களில் கருப்பர் இன மக்கள் உள்ளிட்டோருக்கு அளிக்கப்படும் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு சமூக நீதிக்கும், பன்முகத் தன்மைக்கும் எதிரானது என தலையங்க செய்தி.
* அரசமைப்புச் சட்டம் குறித்து தெரிந்தவர்களை ஆளுநர்களாக ஒன்றிய அரசு நியமிப்பது நல்லது என்கிறது தலையங்க செய்தி.
டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
* அமைச்சரை நீக்குவதற்கு ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை. அரசமைப்பு சட்டத்துக்கு விரோதமான எந்த உத்தரவையும் ஏற்கமாட்டோம் என ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்துவதில் ஒன்றிய அரசு படுதோல்வி அடைந்துள்ளது என கேரள மாநில தலச்சேரி பேராயர் மார் ஜோசப் பாம்ப்ளனி மோடி அரசு மீது குற்றச்சாட்டு.
தி இந்து:
* ஆளுநரின் நடவடிக்கை ஆபத்தானது, அரசியல் சாசனத்துக்கு எதிரானது என மக்களவை மேனாள் பொதுச் செயலாளர் பி.டி.டி.ஆசாரி கருத்து.
தி டெலிகிராப்:
* பிரதமர் நரேந்திர மோடி டில்லி பல்கலைக்கழகத்திற்கு வருவதை முன்னிட்டு டில்லி பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் தலைவர்கள் இருவர் வீட்டுக் காவலில் வைப்பு. வேலையின்மை, பல்கலைக்கழகத்திற்கு குறைந்த நிதி ஒதுக்கீடு குறித்து சுவரொட்டிகள் ஒட்டி இருந்தனர்.
* மணிப்பூர் மாநில முதலமைச்சர் பிரேன் சிங் தனது பதவியை காப்பாற்றிக்கொள்ள துடித்துக் கொண்டிருக் கிறார். எனவே அவர் பதவி விலகப் போவதாக கூறுவது ஒரு நாடகம்.என்பதாக தகவல்.
* டில்லி அரசை கட்டுப்படுத்தும் அவசர சட்டத்தை எதிர்த்து ஆம் ஆத்மி உச்ச நீதிமன்றத்தில் மனு.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment