எப்படி அழைத்தாலும் நாங்கள் ‘இந்தியா'தான்: மோடிக்கு ராகுல்காந்தி பதில் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 27, 2023

எப்படி அழைத்தாலும் நாங்கள் ‘இந்தியா'தான்: மோடிக்கு ராகுல்காந்தி பதில்

புதுடில்லி,ஜூலை27- டில்லியில் 25.7.2023 அன்று நடைபெற்ற பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் கள் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி குறித்து பிரதமர் மோடி விமர்சித்துப் பேசுகையில், "எதிர்க் கட்சிகள் கூட்டணிக்கு "இந்தியா" என பெயர் வைத்துள்ளனர். 

ஆனால் பயங்கரவாத அமைப் பான இந்தியன் முஜாகிதீன் என்ற பெயரிலும், கிழக்கிந்தியா கம்பெனி என்ற பெயரிலும் "இந்தியா" உள்ளது" என்றார். அதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதிலடி கொடுத்து உள்ளார்.

ராகுல் காந்தி தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, 

"நீங்கள் எங்களை எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம் மிஸ்டர் மோடி. ஆனால், நாங்கள் இந்தியா". மணிப்பூரை குணப்படுத்த நாங்கள் உதவுவோம். அங்குள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் கண்ணீரைத் துடைப்போம். மணிப் பூரில் அன்பு மற்றும் அமைதியை நாங்கள் மீண்டும் கொண்டு வருவோம்.

இந்தியாவின் அடிப்படை கொள்கைகளை மணிப்பூரில் மீண் டும் கட்டியெழுப்புவோம்" எனக் கூறி உள்ளார்.

No comments:

Post a Comment