சென்னை,ஜூலை20- பொது இடங்களில் மக்களின் பாது காப்பை உறுதிசெய்யும் வகையில் சிசிடிவி கேமரா மற்றும் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தும் பணி நடப்ப தாக தமிழ்நாடு அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பொறியாளர் சுவாதி கடந்த 2016 ஜூன் மாதம் கொடூர மாக கொலை செய்யப்பட்டார். இந்நிலையில், பொது இடங்களில் கண்காணிப்பு குறைபாடுகளை களைந்து, பொது இடங்களில் கூடும் பொதுமக்களின் பாது காப்பை உறுதிப்படுத்தும் வகை யில் தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்க வேண்டுமென மூத்த நீதி பதியாக இருந்த என்.கிருபாகரன் சென்னை உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை வைத்திருந்தார்.
அதை ஏற்று அப்போதைய தலைமை நீதிபதி அமர்வு, பொது நல வழக்கை விசாரணைக்கு எடுத்து விசாரித்து வருகிறது.
இந்த வழக்கு தற்போதைய தலைமை நீதிபதி வி.எஸ்.கங்கா புர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் (18.7.2023) விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசு தரப் பில் அரசு பிளீடர் பி.முத்துக்குமார் ஆஜராகி, பொதுமக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேம ராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் நடந்த ஓராண் டில் 69 சதவீத இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. ஆட்டோ, கால் டாக்சி ஆகியவற் றிலும் ஜிபிஎஸ் கருவிகளை பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற் போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வேண் டும் என்றார்.
இதையடுத்து, தெற்கு ரயில்வே தரப்பில் வழக்குரைஞர் பி.டி.ராம் குமார் ஆஜராகி, ரயில் நிலையங் களில் சிசிடிவி கேமராக்கள் பொருத் தப்பட்டு உரிய பாதுகாப்பு நடவடிக் கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார். இவற்றை பதிவு செய்த நீதிபதிகள், பாதுகாப்பு நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கும், தெற்கு ரயில்வேக்கும் அவகாசம் வழங்கி விசாரணையை ஆகஸ்ட் 11ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர். இந்த பாதுகாப்பு நடவடிக் கைகள் எத்தனை நாள்களில் முடிக் கப்படும் என்பதையும் அறிக்கையில் தெரிவிக்க வேண்டும் என்றும் நீதி பதிகள் உத்தரவிட் டுள்ளனர்.
No comments:
Post a Comment