கோட்டாட்சியர் விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை, ஜூலை 8- ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட பெண்ணை கோயிலுக்குள் அனும திக்க மறுக்கப்பட்டது தொடர்பாக கோட்டாட் சியர் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் தொட்டி யத்தைச் சேர்ந்த வனிதா, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: ''நானும் செந்தில் குமார் என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். நான் வேறு சமூகத்தைச் சேர்ந் தவர் என்பதால் என்னையும், என் கணவரையும் எங்கள் ஊரில் உள் சிறீ பகவதி அம்மன் மற்றும் மகா மாரியம்மன் கோயிலுக்குள் செல்லவிடாமல் தடுத்து வருகின் றனர். கிராம திருவிழாக்களிலும் எங்களை அனுமதிப்பது இல்லை.
இந்நிலையில் கோயிலில் ஜூலை 9இல் குடமுழுக்கு நடை பெறுகிறது. இதற்கு எங்களிடம் வரி வாங்க வில்லை. குடமுழுக்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் கூடாது என கூறியுள் ளனர். எனவே குடமுழுவுக்கு நிகழ் வுக்கு எங்களிடம் வரி வசூலிக் குவும், சாமி தரிசனம் செய்ய எங் களை அனுமதிக்கவும் உத்தரவிட வேண் டும்'' என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதி பி.புகழேந்தி விசாரித்து பிறப்பித்த உத்தரவு: ''மனுதாரர் வேறு சமூகத்தை சேர்ந் தவர் என்பதால் 3 ஆண்டுகள் கிராம விழாக்கள் மற்றும் கோயில் விழாக்களில் கலந்துகொள்ள அனுமதி மறுக்கப்பட்டதா? இது போன்ற பழக்க வழக்கம் தொட் டியம் கிராமத்தில் உள்ளதா என வருவாய் கோட்டாட்சியர் விசா ரணை நடத்தி ஜூலை 20இல் அறிக்கை தாக்கல் செய்ய வேண் டும். குடமுழுக்கு விழாவுக்கு மனுதாரரிடம் வரி வசூலிக்க வேண்டும். குடமுழுக்கில் மனு தாரரை அனுமதிக்க வேண்டும்'' என்று நீதிபதி உத்தரவில் கூறி யுள்ளார்.
No comments:
Post a Comment