கபிஸ்தலம், ஜூலை 21 - வைக்கம் நூற்றாண்டு விழா மற்றும் திராவிட மாடல் விளக்க தொடர் தெருமுனை கூட்டம் 17.7.2023 திங்கட்கிழமை மாலை கபிஸ்தலம் கடை தெருவில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்றது.
பாபநாசம் ஒன்றிய செயலாளர் சு. கலியமூர்த்தி தலைமை தாங்கினார். கபிஸ்தலம் மகளிர் அணி பொறுப்பாளர் வி.பொம்மி மாவட்ட செயலாளர் உள்ளிக்கடை சு.துரைராஜ், ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். என். கைலாசம் வரவேற்புரையாற்றினார். தலைமைக் கழக அமைப்பாளர் குடந்தை க. குருசாமி தொடக்கவுரை யாற்றினார்.
கழக சொற்பொழிவாளர், வழக்குரைஞர் பூவை. புலிகேசி சிறப்புரையாற்றினார். வி. மோகன் பகுத்தறிவாளர்கழக மாநில பொதுச்செயலாளர், மாவட்ட செயலாளர் சு.துரைராஜ், குடந்தை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் கு.நிம்மதி, ப.க மாவட்ட அமைப்பாளர் க.திருஞானசம்பந்தம், பாபநாசம் ஒன்றிய தலைவர் தங்க. பூவானந்தம், உம்பளபாடி சா. வரதராஜன், ஒன்றிய துணை செயலாளர் க. ஜனார்த்தனம், மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் கோவி. பெரியார் கண்ணன், பாபநாசம் நகர தலைவர் வெ. இளங்கோவன், பாபநாசம் நகர செயலாளர் மு. வீரமணி, ப.க ஒன்றிய தலைவர் மு. சேகர், கபிஸ்தலம் ஏ. கைலாசம், கபிஸ்தலம் ராமராஜ் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.
No comments:
Post a Comment