பெங்களூரு, ஜூலை 8 - கடந்த 2021-ஆம் ஆண்டு பாஜக ஆட்சியின் போது, நாட்டிலேயே முதல் மாநிலமாக கருநாடகாவில் தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தேசிய கல்விக் கொள்கை ரத்து செய்யப்படும் என தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது. இந்நிலையில் புதிதாக ஆட்சி பொறுப் பேற்றுள்ள முதலமைச்சர் சித்தரா மையா 2023-2024-ஆம் ஆண்டுக்கான பட் ஜெட்டை நேற்று (7.7.2023) தாக்கல் செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது: கருநாடக மாநிலத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய கல்விக் கொள்கை ரத்து செய்யப்படும். அதற்கு பதிலாக கருநாடக மாநில கல்விக் கொள்கை கொண்டு வரப்படும். இந்த புதிய கல்விக் கொள்கை கருநாடக மாநிலத்தின் வரலாறு, சமூக, பொருளாதார, கலாச்சார அம்சங்களை உள்ளடக்கியதாக இருக்கும். இதற்காக வல்லுநர் குழு உருவாக்கப்பட்டு இந்தகல்வித் திட்டம் நடப்பு ஆண்டிலேயே அமல்படுத்தப்படும். இவ்வாறு சித்தரா மையா அறிவித்தார்.
No comments:
Post a Comment