அரசுக்கு பொதுமக்களின் கோரிக்கை
தருமபுரி, ஜூலை5- தந்தை பெரியாரின் சமூக சமத்துவ கொள்கையை செயல் படுத்தும் நோக்கில் அனைத்து சமூகத் தினரும் ஒற்றுமையாகவும் சகோதரத்து வத்துடனும் வாழ வேண்டும் என்ற நோக்கில் 1997ஆம் ஆண்டு முத்தமிழறி ஞர் கலைஞரால் பெரியார் நினைவு சமத்துவபுரம் தொடங்கப்பட்டது.
அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும் ஒரு பெரி யார் சமத்துவபுரம் நிறுவி 100 வீடுகள் அமைத்து இட ஒதுக்கீட்டிற்கு ஏற்ப வீடுகளை ஒதுக்கீடு செய்து பயனாளி களுக்கு வழங்கப்பட்டது. இந்த நிலை யில் தருமபுரி மாவட்டத்தில் பென்னா கரம், காரிமங்கலம் தருமபுரி, அரூர், மொரப்பூர், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய ஒன்றியங்களில் பெரியார் சமத்துவபுரம் பணிகள் நடைபெற்று முடிந்த நிலை யில் பயனாளிகளுக்கு ஒப்படைத்தனர்.
அனைத்து சமத்துவபுரங்களிலும் நூலகம், பெரியார் சமத்துவபுரம் என் னும் வளைவு, பொன்மொழிகளுடன் கூடிய தந்தை பெரியார் சிலைகளை அமைத்து இருந்தனர். ஆனால் என்ன காரணத்தாலோ பாலக்கோடு ஒன்றி யம் பாடி சமத்துவபுரம் பணி முழுமை பெறவில்லை.
இப்பணிகள் அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டன. மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அதற்கான நிதி ஒதுக்கீடு செய்து பணி நிறைவு பெற்று பயனாளிகளுக்கு வழங்கப்பட் டது.
ஆனால், பெரியார் நினைவு சமத்து வபுரம் என்னும் பெயரில் (ஆர்ச்) வளைவோ, தந்தை பெரியார் சிலையோ வைக்கப்படவில்லை என்பதுடன் நூல கமும் படிப்பகமும் ஏற்படுத்தித் தர வில்லை, சமத்துவபுரத்தில் குடியிருப் போர் இறக்க நேரிட்டால் அவர்களை அடக்கம் செய்வதற்கு கூட இடமின்றி குடியிருப்பவர்களின் சொந்த கிராமத் தில் உள்ள சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்யும் நிலை உள்ளது. சமத்துவபுரத்தில் சுற்றுச்சுவர் இல்லாமலும், ஒகேனக்கல் கூட்டு குடி நீர் திட்டம் சென்றடையவில்லை என் றும் தெரு விளக்கு கூட சரியாக இல்லை என்றும் குடியிருப்பு வாசிகள் தெரிவித் தனர்.
தற்போது குடியிருப்பு புதுப்பிப்புப் பணி நடைபெற்றுள்ளது. இருப்பினும், தெரு, சாலை அமைக்கும் பணியில் மிக வும் காலதாமதம் உள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிப்படுவதாக சம்பந் தப்பட்ட பெரியார் சமத்துவபுர குடி யிருப்புவாசிகள் தெரிவித்தனர்.
அந்த சமத்துவபுரத்திற்கு பெரியார் நினைவு சமத்துவபுரம் என்று வளைவு (ஆர்ச் ) இல்லாத நிலையில் நெடுஞ்சாலைத்துறை பெயர் பலகையில் சமத்துவபுரம் என்று மட்டுமே எழுதி வைத்துள்ளனர்.
பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் தந்தை பெரியார் சிலையை நிறுவ வேண்டும், பெரியார் நினைவு சமத்துவபுரம் என்று வளைவு (ஆர்ச்) ஏற்படுத்த வேண்டும், சுடுகாடு அமைத்து தரப்பட வேண்டும், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட திட் டத்தை குடியிருப்பு மக்களின் தாகம் தீர்க்க செயல்படுத்த வேண்டும், சமுதாய கூடம், தெருவிளக்கு அமைத்து தர வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பெரியார் நினைவு சமத்துவபுர குடி யிருப்பு வாசிகளும் தமிழ்நாடு அரசுக் கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் கோரிக்கை வைத்துள்ளனர்.
No comments:
Post a Comment