பதிவுத் துறை அலுவலர்கள் - பணியாளர்கள் சொத்து அறிக்கை தாக்கல் செய்க! பதிவுத் துறை தலைவர் உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 19, 2023

பதிவுத் துறை அலுவலர்கள் - பணியாளர்கள் சொத்து அறிக்கை தாக்கல் செய்க! பதிவுத் துறை தலைவர் உத்தரவு

சென்னை, ஜூலை 19 - பதிவுத்துறை அலுவலர்கள் மற்றும் அனைத்துப் பணியாளர்கள் சொத்து அறிக் கையை 25.7.2023க்குள் தாக்கல் செய்ய உத்தரவிடப் பட்டுள்ளது.

இது குறித்து பதிவுத் துறை தலைவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பு வருமாறு:-

17.07.2023 அன்று மாண்புமிகு சென்னை உயர்நீதி மன்றம்W.P. Nos.2711 & 2719 of 2019 & 3177 of 2020 and W.M.P.No.3683 of 2020 Dated 17.07.2023  என்ற வழக்கில் பதிவுத்துறை தலைவர் ஆஜரான போது  பதிவுத்துறையில் பணியாற்றும் அனைத்து நிலை ஊழி யர்களின் சொத்து அறிக்கையைப் பெற்று சரிபார்க்க உத்தரவிட்டதற்கு இணங்க உரிய சுற்றறிக்கை 17.07. 2023 அன்று பிறப்பிக்கப்பட்டது.

அரசு பணியாளர் நடத்தை விதிகள் 1973 விதி 

7(3)இல் அரசு பணியாளர் ஒவ்வொருவரும் அவர்களுடைய சொத்து அறிக்கையினை ஒவ்வொரு 5 ஆண்டு கால இடைவெளியில் உரிய படிவத்தில் சமர்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதன் உட்பிரிவு 7(3) (a)இல் கீழ்கண்டவாறு தெரிவிக்கப்பட் டுள்ளது

“தமக்கு முன்னோர் வழியாக கிடைத்த அல்லது தமக்கு சொந்தமான அல்லது குத்தகை அல்லது அடமானம் மூலம் தன்னுடைய அல்லது தன்னுடைய குடும்ப உறுப்பினரின் அல்லது மற்றொருவரின் பெயரில் உள்ள அசையாச் சொத்து”

சார்பதிவாளர், அதற்கு மேல் உள்ள அலுவலர்கள் மற்றும் மற்ற பணியாளர்கள் அனைவரும் தங்கள், குடும்ப உறுப்பினர் கள்(தாய், தந்தை, சகோதரர், சகோதரி, கணவர்/ மனைவி, மகன், மகள் மற் றும் கணவர்/மனைவின் தாய் தந்தை மற்றும் சகோதரர் - சகோதரி) மற்றும் தொடர்புடைய நபர்கள் ஆகியோரது சொத்து அறிக் கையை ஆதார் எண் மற்றும் நிரந்தர கணக்கு எண் (றிகிழி) இணைத்து ஒரு வாரத்திற்குள் சம்மந்தப் பட்ட மாவட்டப்பதிவா ளர்கள்/துணைப்பதிவுத் துறை தலைவர்கள்/ பதிவுத் துறை 25.07.2023க்குள் சமர்ப்பிக்க சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

- இவ்வாறு பதிவுத் துறை தலைவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment