நமக்குப் போதிய பலமும் கட்டுப்பாடும் இல்லாத காலத்தில் கிடைக்கும் பதவியால் தனிப்பட்ட நபர்கள் பதவியை அனுபவிக்க நேரிடுவதைத் தவிர, சமுதாயத்துக்கு வேலை செய்யும்படியான பலம் ஏற்படாது. அதனால் தான் நான், அப்படிப்பட்ட அதிகாரமில்லாத பதவி கூடாது என்கிறேன். மற்றும், பலமும் கட்டுப்பாடுமில்லாத பதவி நமக்குள் கலகத்தை உண்டாக்கிக் கொண்டேயிருக்கும்; நம் எதிரிகளுக்கும், விஷமத்தையும் தொல்லையையும் விளைவிக்க சவுகரியத்தைக் கொடுத்துக் கொண்டே இருக்கும்.
('குடிஅரசு' 28.7.1940)
No comments:
Post a Comment