பெங்களூரு, ஜூலை 12- பெங்களூருவில் 17, 18ஆ-ம் தேதிகளில் நடைபெறும் கூட்டத்துக்கு அனைத்து எதிர்க்கட்சித் தலை வர்களும் வர வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார் ஜுன கார்கே அழைப்பு விடுத் துள்ளார். வரும் மக்களவைத் தேர்தலில் ஆளும் பா.ஜ.க.வுக்கு எதிராக ஓரணியாக போட்டியிட எதிர்க்கட்சிகள் திட்ட மிட்டுள்ளன.
இதன்படி, எதிர்க்கட்சித் தலைவர்களின் முதல் ஆலோ சனைக் கூட்டம் பீகார் தலை நகர் பாட்னாவில் கடந்த ஜூன் 23-ஆம் தேதி நடை பெற்றது.
இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் 2ஆ-வது ஆலோசனைக் கூட்டம் பெங் களூருவில் ஜூலை 17, 18இ-ல் நடைபெறும் என அறிவிக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து காங் கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எதிர்க்கட்சித் தலைவர் களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
ஜூன் 23ஆ-ம் தேதி பாட்னா வில் நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தோம். வரும் 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்கள வைத் தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த அனைவரும் ஒன்று கூடவேண்டும்.
வரும் 17, 18ஆ-ம் தேதிகளில் பெங்களூருவில் நடைபெறும் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அனைத்துக் கட் சித் தலைவர்களும் வருகை தர வேண்டும். நம் நாடு எதிர் கொள்ளும் சவால்களுக்கு தீர்வு காண நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அதில் கார்கே கூறியுள்ளார். எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாகாந்தி பங் கேற்க வாய்ப்பு இருப்பதாக கருநா டக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவ குமார் தெரிவித்துள்ளார்.
கூட்டத்துக்கான ஏற்பாடு களை கருநாடக காங்கிரஸ் தலைவரும், துணை முதலமைச் சருமான டி.கே.சிவகுமார் செய்து வருகிறார்.
No comments:
Post a Comment