வல்லம், ஜூலை 14- பெரியார் நூற்றாண்டு பாலிடெக் னிக் கல்லூரியில் மார்ச் 2023 முதல் ஒரு ஆண்டு காலம் வரை நடைபெற உள்ள வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தின் துவக்க விழா 11.07.2023 அன்று நடைபெற்றது.
பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி யின் முதல்வர் டாக்டர் இரா. மல்லிகா இவ் விழாவை துவக்கி வைத்து உரையாற்றினார். கேர ளாவில் உள்ள வைக்கம் என்ற சிற்றூரில் அமைந் திருக்கும் கோவில் ஒட் டிய தெருக்களில் ஒடுக் கப்பட்ட மக்கள் நடக்க தடை விதித்த வழக்கத்தை எதிர்த்து போராடி அவர் களுக்கு உரிமை பெற்றுத் தந்த தந்தை பெரியார் அவர்களின் உழைப்பு மற்றும் தியாகத்தை மாணவர்களுக்கு விளக்கி கூறினார்.
மேலும் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங் களின் ஒரு பகுதியாக மாணவர்களுக்கு கருத் தரங்குகள், பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவி தைப் போட்டி மற்றும் வினாடி வினா ஆகியவை நடைபெறுகிறது.
விழாவில் முன்னதாக முதலாம் ஆண்டு துறைத் தலைவர் பி. சாந்தி அனை வரையும் வரவேற்றார். நன்றியுரைக்குப் பின் விழா இனிதே நிறைவுற் றது.
No comments:
Post a Comment