பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி - அறிவியல் கண்காட்சி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 28, 2023

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி - அறிவியல் கண்காட்சி

வல்லம், ஜூலை 28 - வல்லம், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் புதிய தலைமுறை தொலைக்காட்சி இணைந்து நடத்திய வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி 21.07.2023 காலை 10.30 மணிக்கு பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் பல்கலைக் கழக துணைவேந்தர் பேராசிரி யர் எஸ்.வேலுசாமி கண்காட் சியை தொடங்கி வைத்து உரை யாற்றினார். அவர் தமது உரை யில் மாணவர்கள் திறமையாகச் செயல்பட வேண்டும், கல்வி, பகுத்தறிவு சிந்தனையை வளர்க்க வேண்டும் என கூறினார். இந்நிகழ்வில் பல் கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் பி.கே.சிறீவித்யா வாழ்த்துரை வழங்கினார். 

மேலும் நிகழ்ச்சி ஏற்பாடு களை புதிய தலைமுறை தொலைக்காட்சிப் பொறுப்பாளர்கள், துணை மேலாளர் (நிகழ்வுகள் பிரிவு) நந்த கோபால்  அரி, உதவி மேலாளர் முத்துக்குமரன், ராம்குமார் மற்றும் முதன்மையர் முனை வர் பி.விஜயலட்சுமி, எஸ்.சுந்தர நாயகி உள்ளிட்ட பேராசிரி யர்கள் செய்திருந்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு கள், கேடயம், சான்றிதழ் வழங் கப்பட்டன. மேலும் இந்நிகழ்ச் சியில் 35 பள்ளிகள், 383 மாண வர்கள் பங்கேற்று, 204 அறிவியல் கருத்துருக்கள் கண்காட் சியில் இடம் பெற்றன. இந்த கண்காட்சியில் நடுவர்களாக முனைவர்கள் பி.சுகுமாரன், பி.சங்கீதா, ஆர். கலைவாணி, ஜெ.ஜெயசிறீ, ஏ.ஆர்.உமை யாள் சுந்தரி மற்றும் கே.சேச வன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு அறிவியல் கண்டு பிடிப்புகளை மதிப்பீடு செய் தனர். இறுதியாக முனைவர் பி.காயத்ரி நன்றி கூறினார். 

இந்நிகழ்வை முனைவர் என்.லெனின் மற்றும் பி.காயத்ரி தொகுத்து வழங்கினர். 

No comments:

Post a Comment