கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 12, 2023

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

12.7.2023

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

👉 மேனாள் அமைச்சர் மீது சி.பி.அய். நடவடிக்கை குறித்து மாதக் கணக்கில் தமிழ்நாடு ஆளுநர் ஒப்புதல் தராமல் இழுத்தடிப்பது, அவரின் பாரபட்ச நடவடிக்கையை காட்டுகிறது என முதலமைச்சர் சுட்டிக்காட்டி இருப்பதை தலையங்க செய்தி குறிப்பிட்டுள்ளது.

👉  அமலாக்கத்துறை இயக்குநராக சஞ்சய் குமார் மிஸ்ராவுக்கு மூன்றாவது முறையாக பதவி நீட்டிப்பு அளித்தது சட்ட விரோதம். ஜூலை 31 வரை பதவி தொடரலாம், உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.

👉  ஜம்மு - காஷ்மீர் சிறப்பு தகுதி ரத்து தொடர்பான வழக்கு வரும் ஆக. 2 முதல் உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் என்றும், ஆவணங்களை தொகுக்க நோடல் ஆலோசகர்கள் நியமனம் செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

👉  சமூக பிரச்சினைகளில் காவல்துறை உடனடியாக செயல்பட்டு தீர்வு காண வேண்டும், காவல் துறை உயர் அதிகாரிகள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

👉  அதானி குழுமம் மற்றும் ஹிண்டன்பர்க் விவகாரம் குறித்து விசாரணை அறிக்கையை செபி ஆகஸ்ட் 14ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. 

தி ஹிந்து:

👉 பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான பாஜக எம்.பி. பிரிஜ் பூஷண் வழக்கை கையாள்வது தொடர்பாக மோடி அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? விசார ணையின் போது இந்த விவகாரம் ஏன் மூடி மறைக்கப் படுகிறது? இந்த விஷயத்தில் முழு அரசும் மவுனம் காப்பது ஏன்? குற்றம் சாட்டப்பட்டவர் ஏன் இன்னும் பாஜகவில் இருக்கிறார் என்று பிரியங்கா கேள்வி.

டைம்ஸ் ஆப் இந்தியா:

👉 மகாராட்டிராவில் பாஜகவின் அரசியல் மோசடிக்கு காங்கிரஸ் தக்க பதிலடி கொடுக்கும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேச்சு. 

- குடந்தை கருணா


No comments:

Post a Comment