சட்டப் பேரவையைக் கூட்டி ஒன்றிய அரசுக்கு எதிராக தீர்மானம் முதலமைச்சரிடம் செல்வப் பெருந்தகை கோரிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 20, 2023

சட்டப் பேரவையைக் கூட்டி ஒன்றிய அரசுக்கு எதிராக தீர்மானம் முதலமைச்சரிடம் செல்வப் பெருந்தகை கோரிக்கை


சென்னை, ஜூலை 20
-  சட்டப் பேரவையைக் கூட்டி ஒன்றிய அர சுக்கு எதிராக கண்டன தீர்மா னத்தை முதலமைச்சர் கொண்டுவர வேண்டும் என சட்டப் பேரவை காங்கிரஸ் தலைவர் கு.செல்வப் பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:

இந்திய அரசமைப்புச் சட்டத் தின் உயிர் என சட்டமேதை அம் பேத்கரால் விவரிக்கப்பட்ட 32-ஆவது பிரிவை சாகடிக்கும் நோக் கில், தன்னுடைய கட்டுப்பாட்டில் உள்ள அதிகார அமைப்புகளான அமலாக்கத் துறை, வருமானவரித் துறை, ஒன்றிய புலனாய்வுத் துறை ஆகியவற்றை எதிர்க்கட்சியினரை பழிவாங்குவதற்கு ஒன்றிய பாஜக அரசு பயன்படுத்துகிறது.

தமிழ்நாட்டில் அண்மையில் தி.மு.க.வைச் சேர்ந்த 2 அமைச்சர் களுக்கு சொந்தமான இடங்களில் அடுத்தடுத்து அமலாக்கத் துறை யினர் சோதனை, விசாரணை என்ற பெயரில் மிகுந்த மன உளைச் சலையும் உடல் நலக்குறைவையும் ஏற்படுத்தியுள்ளனர்.

விசாரணை அமைப்புகளை ஏவி, பாசிசப் போக்குடன் செயல் படும் ஒன்றிய அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன். இதுபோன்ற நட வடிக்கைகளால் திமுகவை மிரட்டி பணிய வைக்கப் பார்க்கிறது ஒன் றிய அரசு.

ஆனால், அது ஒருபோதும் நடக்காது.கடந்த 9 ஆண்டுகளில் 3,500-க்கும் அதிகமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியிருக்கிறது. இதில் ஆயிரம் வழக்குகளில்கூட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என் பது எதிர்க்கட்சிகளின் குற்றச் சாட்டு.

50 தனிநபர்கள் அல்லது நிறுவ னங்கள் மீதுகூட இன்னும் குற்றம் நிரூபிக்கப்படவில்லை. தண்டனை பெற்றவர்கள் 30 பேர்கூட இல்லை. எனவே, பாஜக ஆட்சியில் நடை பெறும் சோதனைகளின் நோக் கத்தை கேள்விக்குட்படுத்துவது அவசியமாக இருக்கிறது.  எனவே ஒன்றிய பாஜக அரசை கண்டிக்கும் விதமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக சட் டப் பேரவையைக் கூட்டி, ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டனத் தீர்மானம் கொண்டு வரவேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment