அர்ச்சகர் நியமனத்தில் ஜாதிக்கு எந்த பங்கும் இல்லை, யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம் : சென்னை உயர்நீதிமன்றம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 28, 2023

அர்ச்சகர் நியமனத்தில் ஜாதிக்கு எந்த பங்கும் இல்லை, யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம் : சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை,ஜூலை28- அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தனி நீதிபதியின் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க சென்னை உயர்நீதி மன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

அர்ச்சகர் நியமனத்தில் ஜாதிக்கு எந்த பங்கும் இல்லை, யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தனி நீதிபதியின் தீர்ப்புக்கு இடைக்காலத் தடைவிதிக்கக் கோரிய வழக்கில் இன்று (28.7.2023) சென்னை உயர்நீதிமன்றம் தனி நீதிபதியின் தீர்ப்புக்கு இடைக்காலத் தடைவிதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.

சேலம் சுகவனேசுவரர் கோயிலில் அர்ச்சகர் நியமனத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்றதை அடுத்து, அர்ச்சகர் நியமனத்துக்கு எதிராக சுப்ர மணிய குருக்கள் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த வெங்கடேசன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 

தனி நீதிபதியின் தீர்ப்புக்கு இடைக்காலத் தடைவிதிக்கக் கோரிய சுப்ரமணிய குருக்களின் மேல்முறையீட்டு மனுமீதான விசாரணை இன்று (28.7.2023) சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி கங்காபூர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பாக  விசாரணைக்கு வந்தது. 

அப்போது தனிதீபதியின் தீர்ப்புக்கு இடைக்காலத் தடைவிதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதி மன்ற அமர்வு உத்தரவு பிறப்பித்தது.

No comments:

Post a Comment