சுயமரியாதை திருமணத்தை பதிவு செய்ய மறுப்பதா? கோபி சார்பதிவாளர் அலுவலகத்தில் பரபரப்பு-போராட்டம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 8, 2023

சுயமரியாதை திருமணத்தை பதிவு செய்ய மறுப்பதா? கோபி சார்பதிவாளர் அலுவலகத்தில் பரபரப்பு-போராட்டம்!

ஈரோடு,ஜூலை 8 - கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்தவர் வேணு கோபால். அவருடைய மகன் லெனின் (வயது26). எம்.எஸ்.சி படித்துள்ள இவர் பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் உணவு கட்டுப்பாட்டு அலுவலராக வேலை செய்து வருகிறார். வால் பாறையை சேர்ந்த நடராஜ் என்ப வரின் மகள் சிந்து ( வயது25). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். 

லெனினும், சிந்துவும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள் ளனர். இவர்களது காதலுக்கு இருதரப்பு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர்

அதைத்தொடர்ந்து லெனினும், சிந்துவும் வீட்டை விட்டு வெளி யேறி கோபியில் உள்ள ஈரோடு வடக்கு மாவட்ட திராவிடர் கழக அலுவலகத்தில் சுயமரியாதை திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து காதல் இணையர் திருமணத்தை பதிவு செய்ய கோபி யில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்துக்குள் சென்றுள்ளனர். ஆனால் சார் பதிவாளர் சுயமரி யாதை திருமணத்தை பதிவு செய்ய மறுத்துள்ளதாக கூறப்படு கிறது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் திராவிடர் கழக நிர்வாகிகள், வழக் குரைஞர்கள் சார்பதிவாளர் அலு வலகத்துக்கு சென்று கேட்டுள் ளனர். அதற்கு சார்பதிவாளர், போதுமான ஆதாரம் இல்லை என்று கூறி திருமணத்தை பதிவு செய்ய மறுத்துள்ளார். இதனால் சார்பதிவாளர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கோபி காவல்துறையினர் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட் டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டது. 

இதையடுத்து அதன் பின்னர் சார்பதிவாளர், லெனின்-சிந்து திருமணத்தை பதிவு செய்தார். இதனால் கோபி சார்பதிவாளர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

No comments:

Post a Comment