அண்ணாகிராமம், ஜூலை 31- 26.7.2023 மாலை 6 மணியளவில், அண்ணா கிராம ஒன்றிய திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் மேல் பட்டாம் பாக்கம், டி.என்.பாளை யம், டி.எம்.பள்ளி வளா கத்தில் அண்ணா கிராம ஒன்றிய கழக தலைவர் இரா.கந்தசாமி தலைமை யில் நடைபெற்றது.
ஒன்றிய செயலாளர் இ.இராஜேந்திரன் அனைவரையும் வரவேற் றுப் பேசினார். கூட்டத் தில் மாவட்ட கழகத் தலைவர் சொ.தண்ட பாணி, மாவட்ட செயலா ளர் கவிஞர் க.எழிலேந்தி, மாவட்ட மகளிரணி தலைவர் செ.முனியம் மாள், மாவட்ட பகுத்தறி வாளர் கழகத் துணைத் தலைவர் ப.சிவன் ஆகி யோரது உரைக்குப் பின் கழகப் பொதுச் செயலா ளர் முனைவர் துரை. சந்திரசேகரன் சிறப்புரை ஆற்றினார்.
கூட்டத்தில் டி.என்.பாளையம் கழக செயலா ளர் ச.திராவிட பேபி, துணைத் தலைவர் அ.ரஞ்சித், துணை செயலாளர் த.தனுஷ், அமைப்பாளர் ச.பிரவின் மற்றும் 50க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்துகொண்டனர்.
இறுதியில் டி.என்.பாளையம் கிளை தலை வர் அ.இரமேஷ் நன்றி கூறினார்.
திராவிடர் கழக பொதுக்குழு, தலைமைக் குழு தீர்மானங்களை ஏற்று செயல்படுத்துவது எனவும், வருகின்ற ஆகஸ்ட் 5ஆம் தேதி நடுவீரப்பட்டு பகுதியில் நடைபெற இருக்கும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் ஏராளமான இளைஞர் களுடன் கலந்துகொண்டு சிறப்பிப்பது எனவும், நீதி மன்றங்களில் புரட்சியா ளர் அம்பேத்கர் அவர்க ளின் படத்தை நீக்க வேண் டும் என்ற நீதிபதிகளின் உத்தரவை வன்மையாகக் கண்டிக்கிறது எனவும், மணிப்பூர் மாநிலத்தில் குக்கி பழங்குடி இன மக் களுக்கு எதிராக நடை பெறும் வன்முறையைக் கண்டிப்பதோடு பழங் குடி இனப் பெண்களுக்கு ஏற்பட்ட பாலியல் வன் முறையை வன்மையாகக் கண்டிப்பதோடும், இதில் மெத்தனப் போக்கோடு இருக்கும் ஒன்றிய அரசை யும் வன்மையாகக் கண் டிக்கிறோம் என தீர்மா னங் கள் நிறைவேற்றப்பட்டன.
No comments:
Post a Comment