“நான் உங்களுக்குப் புதியவன் அல்ல. நம்முடைய நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் பலவேறு திட்டங்கள் மூலம் நாம் முன்னேற்றம் அடைந்து கொண்டேதான் வருகின்றோம். முன்னேற்றம் என்பது வசதி உள்ளவர்கள் மட்டும் முன்னேற்றம் அடைவது ஆகாது. கீழ் நிலையில் உள்ளவர்களை முன்னேற்றத்திற்குக் கொண்டு வருவதுதான் முன்னேற்றம் ஆகும். அதனைத்தான் காங்கிரஸ் அரசாங்கம் நடத்திக் கொண்டு வருகிறது. நாட்டில் கோடான கோடி பேர்கள் வீடில்லாமலும், சாப்பாடு இல்லாமலும் வேலை இல்லாமலும் இருக்கின்றார்கள். அவர்கள் அனைவரையும் முன்னேற்றத்துக்குக் கொண்டு வரவேதான் காந்தியார் சுதந்திரம் பெற்றார்.
நாட்டில் கோடான கோடி பேர்கள் கஷ்டப்படுவதற்குக் காரணம் என்ன? தொழில் வசதிகளைப் பெறுவதற்குப் படிப்பு முக்கியம். குறைந்தபட்சம் 10ஆவது வரையிலாவது படிக்க வேண்டும். அந்த வசதியைத்தான் அரசாங்கம் கொடுத்துள்ளது. எல்லா இனத்தின் ஏழைக் குழந்தைகள் 11ஆவது வகுப்புவரையில் இலவசமாகப் படித்து வருவதற்கு, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆகவே, ஒவ்வொரு ஏழையும் தன் குழந்தையைப் படிக்கவைக்க வேண்டும். ஏனெனில் எந்தச் சொத்தும் இல்லாதவர்களுக்குக் கல்வி ஒரு சொத்தாகும். கல்வி என்கிற சொத்தைப் பெற்றுவிட்டால் வறுமை தானே ஒழிந்துவிடும்.”
(முதலமைச்சர் கே.காமராசர், 27.12.1961 அன்று தென்னார்க்காடு மாவட்டம் குமராட்சியில் நடைபெற்றப் பொதுக் கூட்டத்தில் பேசியது.)
No comments:
Post a Comment