குடிக்க சொட்டுத் தண்ணீர் கிடைக்காத இடத்தில் கூட, அசுத்தமடைந்த நீர் கிடைப்பது விந்தை தான். அதேபோல காற்றில், குறிப்பாக இரவு நேரக் காற்றில் ஈரப்பதம் நிறைந்திருக்கிறது. இந்த இரண்டையும் வைத்து, குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்கலாம் என்கின்றனர், அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள்.
பாலைவனத்தில் கள்ளிச் செடிகள் எப்படி காற்றிலுள்ள ஈரப்பதத்தை உறிஞ்சுகின்றன என்பதை கவனித்து, அதே போல, நேனோ பரப்புகளை கொண்ட, நுண் மரம் போன்ற அமைப்பை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
ஹைட்ரோ ஜெல்லால் ஆன இந்த அமைப்பு, பகலில் சூரிய வெப்பத்தை உள்வாங்கி, அடிப்பகுதியில் உள்ள நீரை ஆவியாக்கி, அந்த ஆவியை ஒரு கலனில் குளிர்வித்து தூய நீராக மாற்றித் தருகிறது.இந்த அமைப்பின் மேற்போர்வையை நீக்கி னால், இரவில், காற்றிலுள்ள நீர் திவலைகளை ஈர்த்து சேகரித்து தருகிறது.
புதுமையான நுண் மரம், 1 சதுர மீட்டருக்கு, ஒரு நாளைக்கு, 34 லிட்டர் துய தண்ணீரை செலவின்றி சேமித்து தரும். எனவே தான் இதை, 'தண்ணீர் சுரக்கும் மரம்' என, கலிபோர்னிய பல்கலைக்கழக விஞ்ஞானிகள் அழைக்கின்றனர்.
No comments:
Post a Comment