ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 26, 2023

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

 கவனத்திற்குரிய 

முக்கிய செய்திகள்

26.7.2023

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* பிரதமர் மோடி ‘இந்தியா' எனும் பெயரை எப்படி வேண்டுமானாலும் அழைக்கட்டும். நாங்கள் மணிப்பூர் பிரச்சினைக்குத் தீர்வு காண்போம், ராகுல் பேட்டி.

* மணிப்பூர் கலவரத்தை அடக்கவில்லை என்றால் தீ வடகிழக்கு மாநிலங்களில் பரவும் அபாயம் உள்ளது என்கிறது தலையங்க செய்தி.

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்காததால் ஒன்றிய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்: ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள் முடிவு.

* பிரதமர் மோடிக்கு ‘இந்தியா' கூட்டணியின் பெயர் பிடித்து விட்டது. அதனால் அது குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார் என மம்தா கிண்டல்.

தி டெலிகிராப்:

* மணிப்பூரில் உள்ள குகி-சோ பழங்குடியினருக்கு ஆதரவாக மிசோரமில் ஆயிரக்கணக்கான மக்கள் பேரணியாகச் சென்றனர்.

* நாடாளுமன்ற விதி 176-அய் விட 267இல் விவாதம் நடத்தும் கோரிக்கை முன்னுரிமை பெறும் என மாநிலங் களவைத் தலைவர் ஜக்தீப் தன்கர் ஒப்புதல். ஆனால் விவாதம் நடத்த மறுப்பது ஏன், ப.சிதம்பரம் கேள்வி!

டைம்ஸ் ஆப் இந்தியா:

* எதிர்க்கட்சி மாநிலங்களுக்கு எதிராக தீவிர நடவடிக்கைகளை எடுக்கும் ஒன்றிய அரசு, அது ஆளும் மாநிலங்களில் ஏன் தயக்கம் காட்டுகிறது என உச்சநீதி மன்றம் சாடல்.

- குடந்தை கருணா

No comments:

Post a Comment