மணிப்பூர் வன்முறை குறித்து ஜார்க்ண்ட் முதலமைச்சர் குடியரசுத் தலைவருக்குக் கடிதம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 24, 2023

மணிப்பூர் வன்முறை குறித்து ஜார்க்ண்ட் முதலமைச்சர் குடியரசுத் தலைவருக்குக் கடிதம்

ராஞ்சி, ஜூலை 24 மணிப்பூரில் நடக்கும் வன்முறை குறித்து குடியரசுத் தலைவருக்கு ஜார்க் கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் கடிதம் எழுதி உள்ளார். கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக மணிப்பூரில் நடக்கும் கலவரத்தைக் கட்டுப்படுத்தி அங்கு அமைதியை நிலைநாட்டுவதற்குத் தகுந்த நட வடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் வலியுறுத்தியுள் ளார். அவர் இது குறித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு கடிதம் எழுதி உள்ளார்.- அதில் அவர்

“கொடுமையை கண்டு மவுனம் காப்பது ஒரு கொடிய குற்றமாகும். எனவே மணிப்பூர் மாநிலத்தில் நடந்து வரும் வன்முறைகள் குறித்து கனத்த இதயத்துடனும் ஆழ்ந்த வேதனையுடனும் குடியரசுத்தலைவ ருக்கு கடிதம் எழுத வேண்டிய கட்டாயத்தில் இன்று இருக்கிறேன். மணிப்பூரும், இந்தியாவும் இந்த இருண்ட நெருக்கடியான நேரத்தை எதிர்கொண்டு வரும் சமயத்தில், மணிப்பூர் மக்களுக்கும், இந்திய குடிமக்கள் அனைவருக்கும் இந்த இக்கட்டான காலங்களில் ஒளியை காட்டக்கூடிய நம்பிக்கை மற்றும் உத்வேகத்தின் கடைசி ஆதாரமாக நாங்கள் உங்களை எதிர்நோக்கு கிறோம். இரண்டு நாட்களுக்கு முன், மணிப்பூரில் இருந்து சமூக ஊடகங்களில் கசிந்த ஒரு காட்சிப் பதிவில் பெண்கள் மீது நடத்தப் பட்ட விவரிக்க முடியாத காட்டு மிராண்டித்தனம் நம் அனை வரையும் ஆழமாக உலுக்கியது. ஜார்கண்ட் முதலமைச்சர் மற்றும் இந்த தேசத்தின் அக்கறையுள்ள குடிமகன் என்ற முறையில், மணிப்பூரின் நிலைமை குறித்து நான் மிகுந்த மனவேதனையும் கவலையும் அடைகிறேன். அங்கு ஏற்கெனவே நூற்றுக்கணக்கான அப்பாவி உயிர்கள் கொல்லப்பட்டு, சொத்துக்கள் மற்றும் பொது உள் கட்டமைப்புகள் அழிக்கப்பட் டுள்ளன. பெண்கள் சொல்ல முடியாத சித்திரவதை மற்றும் பாலியல் சுரண்டலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.

நமது அரசமைப்பு சட்டம் உத்தரவாதம் அளித்துள்ள மனித வாழ்வு மற்றும் கண்ணியத்தின் உள்ளார்ந்த கோட்பாடுகள் முற் றிலும் உடைந்துவிட்டதாக தெரி கிறது. ஒரு சமூகம் ஒருபோதும் மக்கள் உடல், உணர்ச்சி மற்றும் உளவியல் மிருகத்தனத்திற்கு ஆளா கும் நிலையை அடையக்கூடாது. உலகின் மிகவும் பன்முகத்தன்மை கொண்ட ஜனநாயக நாடாக இருந் தாலும், மே 3 முதல் மணிப்பூரில் அமைதி, ஒற்றுமை, நீதி மற்றும் ஜனநாயக ஆட்சி ஆகியவற்றின் சிதைவை இந்தியா கண்டுள்ளது. மாநில அரசு தனது சொந்த மக் களைப் பாதுகாப்பதிலும், வன் முறை மற்றும் அமைதியின்மையைத் தணிப்பதிலும் தவறிவிட்டது என்பது அதிர்ச்சியளிக்கிறது. தின மும் இரவும் பகலும், பெண்களை நிர்வாணமாக அணிவகுத்துச் செல்லும் சமீபத்திய காட்சிப் பதிவில் இதயத்தை உலுக்கும் காட்சிகளை நாம் காண்கிறோம். சட்டத்தின் ஆட்சி முற்றிலும் சீர்குலைந்துள்ளது போல் தெரி கிறது. சில சுயநலவாதிகளின் மறை முக ஆதரவுடன், இந்த இனக் கலவ ரம் தடையின்றி தொடர்கிறது என் பது மிகவும் வேதனை அளிக்கிறது.

இந்தியாவின் மாண்புமிகு குடி யரசுத்தலைவர் என்ற முறையில், நீதி மற்றும் இரக்கக் கொள்கைகளை நிலைநிறுத்துவதற்கான உங்கள் உறுதியான அர்ப்பணிப்பு எப்போ தும் நம் அனைவருக்கும் வழி காட்டும் வெளிச்சமாக இருந்து வருகிறது. முன்னோக்கிச் செல்லும் வழியைக் கண்டறியவும், நீதி வழங் கப்படுவதை உறுதிப்படுத்தவும், மணிப்பூரின் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கவும் நான் இன்று உங்களை கேட்டுக் கொள் கிறேன்” என்று குடியரசுத் தலை வரைக் கேட்டுக் கொண்டுள்ளார்.


No comments:

Post a Comment