கருநாடக முதலமைச்சர் சித்தராமையாவை உள்துறை அலுவலகமான கிருஷ்ணாவில் அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் (ஏ.அய்.எம். பி.எல்.பி.) பிரதிநிதிகள் சந்தித்து பேசினர். அப்போது, பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்டால் முஸ்லிம்களின் உரிமைகளுக்கு மற்றும் முஸ்லிம் தனிநபர் சட் டத்துக்கு ஏற்படும் அச்சுறுத்தல் குறித்து முதலமைச்சர் சித்தராமையாவிடம் அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் பிரதிநிதிகள் கவலை தெரிவித்தனர்.
இதனையடுத்து, அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் பிரதிநிதிகளிடம் சித்தரா மையா, சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்க மாநில அரசு செயல்படும். இது குறித்து கவலைப்படத் தேவையில்லை. பொது சிவில் சட்ட வரைவு வெளியிடப்பட்ட பிறகு பதில் அளிப்போம். சிறுபான்மையினரின் உரிமைகளை நசுக்குவதை எங்கள் அரசு ஒரு போதும் அனுமதிக்காது. நாடாளுமன்ற தேர்தலை முன் னிட்டு ஒன்றிய அரசு தேவையற்ற சர்ச்சையை உருவாக்குகிறது என்று தெரிவித்தார்.
மக்களிடையே ஒற்றுமை உணர்வை ஊக்குவிக்கும் நோக்கில் நாட்டில் அனைத்து சமூக மக்க ளுக்கும் பொதுவான சட்டங்களை வகுக்க அரசுகள் முயற்சிக்க வேண் டுமென அரசமைப்பு சட்டத்தின் 44ஆவது பிரிவு வலியுறுத்துகிறது. அதன் அடிப்படையில், நாட்டில் பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய பா.ஜ.க. அரசு முன்னெடுத்து வருகிறது.
No comments:
Post a Comment