மாவட்டத் தலைவர் ச.வெங்கட்ராமன் தலைமையேற்று உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் சொ.பொன்ராஜ் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். ‘வைக்கம் போராட்ட நூற் றாண்டு விழா’ என்ற தலைப்பில் தி.மு.க. இலக்கிய அணி மோ.அன்பழகன், பகுத்தறிவாளர் கழகத் தோழர் சீ.மனோகரன் ஆகியோர் தொடக்கவுரையாற்றி னார்கள். அதற்கடுத்து கழகச் சொற்பொழிவாளர் மா.பால்ராசேந்திரம் விரிவானதொரு விளக்கவுரையாற்றினார்.
அவர்தம் உரையில் கேர ளம், சேர நாடாக இருந்தபோது அங்கு ஜாதியில்லை. ஆரியர் நுழைவாலேயே ஜாதி வந்தது. தாழ்ந்த ஜாதியினரென்போர் பார்க்கப்படவும் கூடாது, விற் கவும் பட்டனர். வைகுண்ட சாமிகள் பெண்கள் மார்பை மறைக்கும் உரிமையையும், அடிமை வியாபாரம் தடுக்கப் படவும் போராடிப் பெற்றுத் தந்தார். நாராயணகுரு எடுத்த, தெருவில் நடக்கும் உரிமையை யும், கோவில் நுழைவு உரிமை யும்தான் தொடர்ந்த போராட் டங்களாகி, அவரின் சீடர் டி.கே.மாதவன் என்போரால் நடத்தப்பட்டு, சிறைப்பட்டத் தலைவர்களால், போராட்டம் சீர் கெட்டு, ஆரிய அரசிடம் பணிய வேண்டிய நிலை வருமோ என அஞ்சி, வெற்றி கிட்ட வேண்டுமா யின் ஈ.வெ.ரா.வால் மட்டுமே முடியுமென எண்ணிப் பெரி யாரை அழைத்துப் போராட் டப் பொறுப்பை கே.பி.கேசவ மேனன், ஜோசப்ஜார்ஜ், டி.கே.மாதவன், குரூர் நீலகண்ட நம்பூ திரி ஆகியோர் ஒப்படைத்தனர். கொடுத்த பொறுப்பினை மகிழ்வோடு ஏற்று, குடும்ப மாய்க் கலந்ததோடு, நண்பர்க ளையும் அழைத்துச் சென்று, கொடுஞ்சிறை இன்னல்களை யும் வேதனையாக நினையாது, வெற்றி ஒன்றே தமது குறிக்கோ ளாய்க் கொண்டு போராடி தாழ்ந்த ஜாதிகள் என்று ஒதுக்கி வைத்திருந்த மக்களைக் கேரள வீதிகளில் கைவீசி உல் லாசமாக நடந்துசெல்லும் உரி மையைப் பெற்றுத் தந்தார். இவர்கள் மட்டுமின்றி, “நாங் களும் பெரியார் ஈ.வெ.ரா.வால் தான் உரிமை பெற்றோம்“ என்று அங்குள்ள சரசுவதிப் பார்ப்பனர்களும் வாய்திறந்து சொல்லிடும் அளவிற்குப் போரா டியவர் அய்யா. அய்யாவின் தன்ன லமற்ற தியாகத்தை உளமாற நினைத்து பெருமை கொண்ட தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர் கள் அய்யாவை ‘வைக்கம் வீரர்’ என்று வாயாரப் புகழ்ந்தார்.
வைக்கம் வெற்றி விழா 1925 நவம்பர் 27இல் நடந்தபோது அய்யாவை அழைத்துப் பெருமை சேர்த்னர் கேரள மக்கள். அன்னை நாம்மையாரும் கலந்து கொண்டு பெருமை சேர்த்தார் கள் என்று விரிவுரையாற்றினார். இறுதியாக திராவிட மாணவர் கழக மாநகரத் தலைவர் இ.ஞா.திரவியம் நன்றி கூறிட, நிகழ்ச்சி நிறைவுற்றது.
இந்நிகழ்வில் காப்பாளர் சு.காசி, மாவட்டத் தலைவர் மு.முனியசாமி, மாவட்டச் செய லாளர் கோ.முருகன், மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் செ.வள்ளி, மாவட்ட வழக்குரை ஞரணி அமைப்பாளர் பா.இரா சேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். மேலும், சு.திரு மலைக்குமரேசன், இரா.அய்யம் பெருமாள், செ.அழகு, மாவட்ட இளைஞரணிச் செயலாளர் செ.நவீன்குமார், கரு.மாரி யப்பன், சிவா, பாலா, கோ.இள முருகு, பொ.போஸ் ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரையினைக் கேட்டார்கள்.
No comments:
Post a Comment