தமிழ்நாட்டில் அரிசி விலை குறையும் - அரிசி ஆலை கூட்டமைப்பு தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 27, 2023

தமிழ்நாட்டில் அரிசி விலை குறையும் - அரிசி ஆலை கூட்டமைப்பு தகவல்

சென்னை, ஜூலை 27 - ஒன்றிய அரசு, பாசுமதி அல்லாத சன்னரக அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித் திருப்பதால், இந்த வார இறுதியில், தமிழ்நாட்டில் அரிசி விலை  குறை யும்' என, தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல் அரிசி வணிகர்கள் சங்கங்களின் சம் மேளனம் தெரிவித்துள்ளது.

சம்மேளன தலைவர் டி.துளசிங் கம், செயலர் ஏ.சி.மோகன், பொரு ளாளர் கணேச அருணகிரி ஆகியோர் அளித்த பேட்டி:

உக்ரைன் - ரஷ்ய போரால், அமெ ரிக்கா, அய்ரோப்பிய நாடுகளில், அரி சிக்கு தேவை அதிகரித்து உள்ளது. வட மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கினாலும், தென் மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வறட் சியை முன்னிட்டும், உள்நாட்டு மக்களின் தேவையை கருதி, பாசு மதி அல்லாத சன்னரக அரிசி ஏற்றுமதிக்கு, ஒன்றிய அரசு தடை விதித்து உள்ளது. இந்த முடிவை வரவேற்கிறோம்.

இதனால் எவ்வித தட்டுப்பாடு இல்லாமலும், விலையேற்றம் இல் லாமலும் அரிசி மக்களுக்கு தராள மாக வழங்க இயலும். தமிழ்நாட் டில் இந்த வாரம், அரிசி விலை கிலோவுக்கு, 2 ரூபாய் குறையும். மின் கட்டணம் உயர்த்தப்பட்டதை அடுத்து, தாழ்வழுத்த தொழிற் சாலை களுக்கு, கிலோ வாட்டிற்கு மாதம், 35 ரூபாயாக இருந்த நிரந் தர கட்டணம், 150 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது.

அதிக திறன் ஆலைகளுக்கு கிலோ வாட், 350 ரூபாயாக இருந்த கட்டணம், 550 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. இது, அரிசி ஆலைகளுக்கும் பொருந் தும். இம்மாதம் முதல் குறைந்த திறன் ஆலைகளுக்கு நிரந்தர கட்டணம், 153 ரூபாயாகவும்; அதிக திறன் ஆலைக ளுக்கு, 562 ரூபாயாகவும் உயர்த்தப்பட் டுள்ளது.

அரிசி ஆலைகள், வேளாண் சார்ந்தவை என்பதை கருத்தில் வைத்து, பழைய கட்டணத்தையே அமல்படுத்த வேண்டும். இதனால், அரிசி விலை மேலும் குறையும். ஒன்றிய அரசு, 2017 முதல், ஜி.எஸ்.டி.,யை அமல்படுத்தியது. முதலில், 'பிராண்ட்' அரிசிக்கு, 5 சதவீதம் ஜி.எஸ்.டி., வரி என்று அறிவிக்கப்பட்டது. பின், 2022 ஜூனில் பஞ்சாப், சண்டிகரில் நடந்த ஜி.எஸ்.டி., கவுன்சிலில், 25 கிலோ மற்றும் அதற்கு குறைவாக, பையில் அடைத்து விற்பனை செய் தால், 5 சதவீதம் ஜி.எஸ்.டி., வரி என, அறிவிக்கப் பட்டு உள்ளது. 

தற்போது, ஏழை மக்கள் அனை வரும் தங்கள் குடும்ப தேவைக்கு, 25 கிலோவுக்கு குறைவாக அரிசி வாங்கி வரும் நிலை யில், அவர்களுக்கு வரிவிதிப்பு ஏற்பு டையதாக இல்லை. அரிசி அத்தியா வசிய உணவுப் பொருள் என்பதை கருதி, ஒன்றிய அரசு, 5 சதவீத ஜி.எஸ்.டி., வரியை ரத்து செய்ய வேண்டும். மின் கட்டணம் உயர்வு மற்றும் ஜி.எஸ்.டி., வரி ரத்து செய்யப்பட்டால், அரிசி விலை கிலோவுக்கு மேலும், 4 ரூபாய் குறையும். இவ்வாறு அவர்கள்   கூறினர்.

No comments:

Post a Comment