கியான் வாபி மசூதியில் ஆய்வு நடத்த ஆகஸ்ட் மூன்றாம் தேதி வரை தடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 28, 2023

கியான் வாபி மசூதியில் ஆய்வு நடத்த ஆகஸ்ட் மூன்றாம் தேதி வரை தடை

அலகாபாத் உயர் நீதிமன்றம் ஆணை

அலகாபாத், ஜூலை 28  கியான்வாபி மசூதியில் தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்துவதற்கு வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதிவரை தடை விதித்து அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கியான்வாபி மசூதியில் இந்திய தொல்லியல் துறை அறிவியல் பூர்வமான கள ஆய்வை நடத்தி ஆகஸ்ட் 4-ஆம் தேதிக்குள் அறிக் கையை தாக்கல் செய்ய வாராணாசி மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப் பித்திருந்தது. 

இதனை எதிர்த்து மசூதி நிர்வாகம் சார்பில் உச்சநீதிமன்றத் தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், கியான்வாபி மசூதியில் தொல்லியல் துறை ஜூலை 26-ஆம் தேதி வரை ஆய்வு நடத்த தடைவிதித்து உத்தர விட்டது. 

அத்துடன், மசூதி நிர்வாகம் இந்த விவகாரத்தில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தை அணுகி தீர்வு காண பரிந்துரைத்தது. இதை யடுத்து, அலகாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பிரித்திங்கர் திவாகர் இந்த மனு மீது விசாரணை நடத்தி வருகிறார். 

அஞ்ஜுமன் இன்தெஸமியா மசூதி குழு தாக்கல் செய்த அந்த மனு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் தலைமைநீதிபதி அமர்வின் முன்பாக  விசாரணைக்கு வந்தது. அப்போது மசூதியின் தரப்பில் வழக்குரைஞர் ஆஜரானார். தொல் லியல் துறையின் சார்பில் மூத்த அதிகாரிகளும் நீதிமன்ற விசார ணையில் பங்கேற்று தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி, மசூதி நிர்வாகம் தாக்கல் செய்துள்ள மனுமீது ஆகஸ்ட் 3-ஆம் தேதி இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும். 

அதுவரை மசூதியில் தொல்லியல் துறை ஆய்வு நடத்த நீதிமன்றம் விதித்த இடைக்கால தடை உத்தரவு தொடரும் என்று தலைமை நீதிபதி திவாகர் தெரிவித்தார். வாரணாசி யில் காசி விஸ்வநாதர் கோயிலையொட்டிய பகுதியில் கியான் வாபி மசூதி அமைந்துள்ளது. ஏற்கெனவே கோயில் இருந்த இடத்தை இடித்துவிட்டுதான் இந்தமசூதி கட்டப்பட்டதாக இந்து அமைப் பினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். 

இது தொடர்பான உண்மையை வெளிக் கொண்டு வர தொல்லியல் ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி இந்துக்கள் அமைப்பு நீதிமன்றத்தில் முறையிட்டதை யடுத்து வாரணாசி மாவட்ட நீதிமன்றம் கியான்வாபி மசூதியில் ஆய்வு நடத்த உத்தர விட்டுள்ளது.


No comments:

Post a Comment