செம்மண் குவாரி முறைகேடா? - ஆவணங்களுடன் அமைச்சர் க.பொன்முடி தரப்பில் மறுப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 20, 2023

செம்மண் குவாரி முறைகேடா? - ஆவணங்களுடன் அமைச்சர் க.பொன்முடி தரப்பில் மறுப்பு

சென்னை, ஜூலை 20 செம்மண் குவாரி ஒப்பந்த முறைகேடு விவகாரத்தில் அமைச்சர் க.பொன்முடி தரப்பு ஆடிட்டர், ஆவணங்களுடன் அமலாக்கத் துறையில் ஆஜரானார். தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, கடந்த 2006 - 2011 திமுக ஆட்சியில் உயர்கல்வி, கனிம வளத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது விழுப்புரம் மாவட்டம், வானூர் அடுத்த பூத்துறை கிராமத்தில் அளவுக்கு அதிகமாக 2.65 லட்சம் லோடு லாரிசெம்மண் அள்ளியதாகவும், இதனால் அரசுக்கு ரூ.28.36 கோடி இழப்பு ஏற்படுத்தியதாகவும் க.பொன்முடி மீது குற்றம்சாட்டப்பட்டது. 

இந்நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 17-ம் தேதி காலை 7 மணி முதல் பொன்முடி மற்றும் அவ ருக்கு தொடர்புடைய சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட 7 இடங்களில் அடுத்தடுத்து 13 மணிநேரம் சோதனை நடத்தினர். அப்போது பல்வேறு ஆவ ணங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவற்றை கையோடு எடுத்துச் சென்று ஆய்வு செய்தனர். அமைச்சர் மற்றும் அவரது மகனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசா ரணை நடத்திய போது, செம்மண் குவாரி விவகாரத்தில் எந்த முறைகேடும் நடைபெற வில்லை என்றும், குவாரி மூலம் கிடைத்த வருவாய் தொடர்பான வரவு, செலவு களுக்கு முறையான கணக்கு இருப்பதாகவும், இந்த வரவு, செலவு கணக்கு விவரங்கள் தங்கள் தரப்பு ஆடிட்டர் மூலம் தணிக்கை செய்யப்பட் டுள்ளதாகவும், ஆடிட்டர் மூலம் இந்த ஆவணங்களை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இதற்கு அமலாக் கத்துறை அதி காரிகள், ஆடிட்டர் நேரில் வந்து ஆவணங்களை அளித் தால் அதை பரிசீலிப்பதாக கூறி உள்ளனர். 

 அதன்படி, அமைச்சர் க.பொன்முடியின் ஆடிட்டர் சென்னை சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு நேற்று (19.7.2023) மதியம் 3 மணிக்கு வந்தார். செம்மண் குவாரி தொடர்பான வரவு, செலவு கணக்குகள் அடங்கிய ஆவணங்களை 2 பைகளில் அவர் எடுத்து சென்றார். ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டிய அமலாக்கத்துறை அதிகாரிகள் வேறு பணி காரணமாக வெளியே சென்றுவிட்டதால் ஆடிட்டரிடம் விசாரணை நடத்தவில்லை என அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. ஆடிட்டர் ஆஜரானது குறித்து அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து வேறொரு தேதியில் ஆடிட்டர் ஆஜராக அமலாக்கத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து 3.20 மணிக்கு ஆடிட்டர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.  

No comments:

Post a Comment