தென் மாநிலங்களில் ரயில்வே திட்டங்களைப் புறக்கணிப்பதா? பிரதமர் மீது காங்கிரஸ் தலைவர் அழகிரி குற்றச்சாட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 9, 2023

தென் மாநிலங்களில் ரயில்வே திட்டங்களைப் புறக்கணிப்பதா? பிரதமர் மீது காங்கிரஸ் தலைவர் அழகிரி குற்றச்சாட்டு

சென்னை, ஜூலை 9 - ரயில்வே திட்டங்களில் வட மாநி லங்களுக்கு முக்கியத்து வம் அளிக்கும் பிரதமர் மோடி, தென்னக ரயில் சேவையைப் புறக்கணிப் பதாக தமிழ்நாடு காங்கி ரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: 

ஒன்றிய பாஜக ஆட்சி அமைந்ததுமுதல் தென் னக ரயில்வே தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. ராமேசுவரம் - தனுஷ்கோடி ரயில் பாதை திட்டம் 2006-20-07நிதியாண்டில் தொடங்கப்பட்டு, ரூ.11,400 கோடி நிதி தேவை என அறிவிக்கப் பட்டது. ஆனால், கடந்த 2020ஆம் ஆண்டில் ரூ.211 கோடி மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டது. 2023--2024 ஆண்டில் ரூ.1,000 கோடி ஒதுக்கப் பட்டிருக்கிறது. ஒன்றிய பாஜக அரசால் அறிவிக் கப்பட்ட சென்னை-மாமல்லபுரம்--கடலூர், திண்டிவனம்-செஞ்சி-நகரி, திண்டிவனம்--திரு வண்ணாமலை, தூத்துக் குடி-- அருப்புக்கோட்டை- மதுரை ஆகிய ரயில் திட் டங்களுக்கு கடந்த 9 ஆண்டுகளாக எந்தவித மான ஆய்வோ, நிதி ஒதுக்கீடோ செய்யாமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இதைவிட பெரிய அநீதியை பாஜக அரசு தமிழ்நாட்டிற்கு இழைக்க முடியாது.

தமிழ்நாட்டிற்கு கடந்த 9 ஆண்டுகளில் ரூ.2 லட்சத்து 47 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டி ருப்பதாக பிரதமர் மோடி கூறியிருந்தார். ஆனால், உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு வழங்கிய ரூ.10 லட்சத்து 73 ஆயிரம் கோடியை மறைத்திருக் கிறார். தமிழ்நாடு தொடர்ந்து ஒன்றிய பாஜக அரசால் பல முனைகளில் வஞ்சிக்கப் பட்டு வருகிறது. பிரதமர் மோடி, உத்தரப்பிரதேசம், குஜராத் மாநிலத்துக்கு காட்டும் அக்கறையை தென் மாநிலங்களுக்கு, குறிப்பாக தமிழ்நாட் டிற்கு காட்டுவதில்லை. இதற்கு இன்று தொடங் கும் தனி சரக்கு ரயில் பாதை திட்டமே தக்க சான்றாகும். 

இவ்வாறு அறிக்கையில் அழகிரி தெரிவித்து உள்ளார்.

No comments:

Post a Comment