ராகுல் காந்தியின் மேல் முறையீட்டு மனு தள்ளுபடி தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் போராட்டம் - ஏராளமானோர் கைது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 8, 2023

ராகுல் காந்தியின் மேல் முறையீட்டு மனு தள்ளுபடி தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் போராட்டம் - ஏராளமானோர் கைது

சென்னை, ஜூலை 8 - ராகுல்காந்தியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து சென்னை உள்ளிட்ட இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட் டம் நடத்தி வருகின்றனர். கடந்த 2019ஆ-ம் ஆண்டு கருநாடக மாநி லத்தில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத் தில் பேசிய காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி, மோடி பெயர் குறித்து சர்ச்சைக் குரிய கருத்தை தெரிவித்தார். 

இதுதொடர்பாக ராகுல் காந்தி மீது குஜராத் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர். பூர்னேஷ் மோடி குற்றவியல் அவதூறு வழக்கு தொடர்ந் தார். இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு சூரத் பெருநகர நீதிமன்றம் 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. அத னால் அவர் தனது மக்களவை மக்களவை உறுப்பினர் பதவியை இழந்தார்.

அதை எதிர்த்து சூரத் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த ராகுல் காந்தி, அவதூறு வழக்கு தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கவும் கோரி மனு தாக்கல் செய்தார். ஆனால் அவருக்கு பிணை வழங்கிய மாவட்ட நீதிமன்றம், தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டது. 

அதையடுத்து குஜராத் உயர்நீதி மன்றத்தை ராகுல் காந்தி நாடினார். கடந்த மே மாதம் நடந்த விசார ணையின்போது, அவதூறு வழக்கு தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்த உயர்நீதிமன்ற நீதிபதி ஹேமந்த் பிரச்சாக், கோடைக்கால விடுமுறைக்குப்பின் இறுதித்தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவித்தார்.

இந்த நிலையில் குஜராத் நீதி மன்றம் நேற்று (7.7.2023) வெளியிட்ட வழக்கு அட்டவணையின் படி, ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப் பட்டது. அதில், ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்க குஜராத் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 2 ஆண்டு சிறை தண்டனைக்கு தடை விதிக்க குஜராத் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது.

சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியானது. அதில் தலையிட முடி யாது எனவும் . ராகுல்காந்தி மீது குறைந்தது 10 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் குஜராத் நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது. இந்நிலையில் ராகுல் காந்தியின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ததை எதிர்த்து சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் பல்வேறு இடங் களில் போராட்டம் நடத்தி வரும் காங்கிரஸ் கட்சியினரை காவல் துறை கைது செய்து வருகின்றனர். சென்னையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் போராட்டம் நடை பெற்றது. கே.எஸ்.அழகிரி உள் ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

No comments:

Post a Comment