‘நெக்ஸ்ட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும்! மக்களவையில் தமிழச்சி தங்கபாண்டியன் கோரிக்கை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 30, 2023

‘நெக்ஸ்ட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும்! மக்களவையில் தமிழச்சி தங்கபாண்டியன் கோரிக்கை!

புதுடில்லி, ஜூலை30 - நாடாளுமன்ற மக்­களவையில் விதி எண் 377இன் கீழ், ‘நெக்ஸ்ட்’ தேர்வை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை தமிழச்சி தங்கபாண்டியன் வலியுறுத்தினார். இதுபற்றி அவர் தெரிவித்து இருப்பதாவது:- 

தேசிய மருத்துவ ஆணையத்தின் முரண்பட்ட தகவல்களால் தேசிய வெளியேறும் தேர்வில் (நெக்ஸ்ட்) ஒரு குழப்பமான சூழல் மாணவர் களிடையே தொடர்கிறது. 

கடந்த  2019ஆம் ஆண்டு எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் ஒரு மாதிரித் தேர்வு அறிவிக்கப்பட்ட து, சொல்லப்போனால் மாணவர்­கள்மீது அது திணிக்­கப்பட்டது. அது விடைகளில் ஒன்றை தேர்ந் தெடுக்கும் கேள்வி முறை ஆகும். தேர்வுக்கு படிக்கும்போது, மாண வர்­கள் மருத்துவப் படிப்பிலும் கவனம் செலுத்த வேண்டும். ஏனெ னில் தற்போதைய பல்­கலைக்கழக பாடத்திட்டம் செய்முறை மற்றும் கல்வியறிவு இரண்டையும் மதிப் பிடுகிறது. 

இதுமட்டுமின்றி மாணவர்­கள் ‘நெக்ஸ்ட்’ தேர்வுக்காக பயிற்சி மய்யங்­களையும் நாட வேண்டி யிருக்கும். இது மாணவர்­களுக்கு மேலும் சுமையை ஏற்படுத்தும். எனவே இந்த தேர்வை திரும்பப் பெறக்கோரி தஞ்சாவூர், சென்னை, திருவாரூர் மற்றும் திருச்சி மருத் துவக்­கல்லூரி மாணவர்­கள் இந்த மாத தொடக்­கத்தில் ஆர்ப்பாட் டம் நடத்தினர். 

தமிழ்நாடு அரசு ‘நீட்’ தேர்வை தொடர்ந்து எதிர்த்து வருகிறது. இந்தநிலையில் அதில் மேலும் ஒரு தேர்வை சேர்ப்பது முற்றிலும் தேவையற்றது. ஏற்றுக்கொள்ள முடியாதது. எனவே நெக்ஸ்ட் தேர்வுக்கு தடை விதிக்கவேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற தேர் வுகளை அறிமுகப்படுத்துவதை நிறுத்த வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன். 

-இவ்வாறு மக்களவை உறுப் பினர் தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment