தமிழ்நாட்டில் எட்டு அய்.ஏ.எஸ். அதிகாரிகள் இட மாற்றம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 2, 2023

தமிழ்நாட்டில் எட்டு அய்.ஏ.எஸ். அதிகாரிகள் இட மாற்றம்

 சென்னை, ஜூலை 2 தமிழ்நாட்டில் புதிய தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா 30.6.2023 அன்று பொறுப் பேற்றுக்கொண்டார். இந்த நிலையில் தமிழ்நாட்டின் அய்ஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

அதன்படி, உயர்கல்வித்துறை செயலாளராக கார்த்திக்,  நகராட்சி நிர்வாகம் மற்றும் வழங்கல் துறை செயலாளராகக் கார்த்திகேயன்,  கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளத்துறை செயலாளராக மங்கத்ராம் சர்மா,  பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை செயலாளராக ரீட்டா ஹரிஷ் தாக்கர்,  மின்சார வாரியத்தின் இணை ஆணையராக விஷ்ணு மகாராஜன்,  தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழக இயக்குநராக அண்ணா துரை மற்றும்  நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன் வருவாய் மற்றும் நிதித்துறை துணை ஆணை யராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.  

கலைஞர் நூற்றாண்டு விழா தொடர்பான நிகழ்ச் சிகளை மேற்பார்வை செய்ய தனி அதிகாரியாக சுப்பையன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நுகர்பொருள் வாணிபக்கழக மேலாண் இயக்குநராக இருந்த பிரபாகர், தமிழ்நாடு சாலைப்பணி திட்ட இயக்குநராகவும், சென்னை-கன்னியாகுமரி தொழில் வழித்தட திட்ட இயக்குநராக பிரபாகருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப் பட்டு உள்ளது. மேலும், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண் இயக்குநராகவும் பிரபாகர் செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு 

தனி அதிகாரி நியமனம் 

மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான சிறப்பு அதிகாரியாக இளம் பகவத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். செப்டம்பர் மாதம் முதல் மகளிர் உரிமை தொகை திட்டம் செயல்படுத்தப்படவுள்ள நிலையில், அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மகளிர் உரிமைத்தொகை திட்ட சிறப்பு அதிகாரியாக இளம்பகவத் அய்ஏஎஸ்க்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் முதல் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தப்படவுள்ள நிலையில் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.  தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக இணை மேலாண் இயக்குநராக விசு மகாஜனும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிறபடுத்தப்பட்டோர் நலத்துறை செய லாளராக ரீத்தா ஹரீஷ் தக்கரும் நியமிக்கப்பட்டுள்ளார்.  கலைஞர் நூற்றாண்டு விழா தொடர்பான நிகழ்ச்சிகளை மேற்பார்வை செய்ய தனி அதிகாரியாக சுப்பையன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நிர்வாக இயக்குநராக ஏ.அண்ணாதுரை நியமிக்கப்பட்டுள்ளார்.  ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் அர்ச்சனா பட்நாயக், மருத்துவ பணியாளர் தேர்வு வாரிய தலைவராக கூடுதல் பொறுப்பு வகிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment