ஈரோடு பொதுக்குழு, சென்னை தலைமை செயற்குழு கூட்ட முடிவுகளை செயல்படுத்த தருமபுரி மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 14, 2023

ஈரோடு பொதுக்குழு, சென்னை தலைமை செயற்குழு கூட்ட முடிவுகளை செயல்படுத்த தருமபுரி மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு!

தருமபுரி. ஜூலை 14-- தருமபுரி மாவட்ட திராவிடர் கழக கலந் துரையாடல் கூட்டம் 10-.7-.2023 மாலை 5 மணி அளவில் தருமபுரி பெரியார் மன்றத்தில் மாவட்ட  தலைவர் கு.சரவணன்  தலை மையில் நடைபெற்றது. 

கலந்துரையாடல் கூட்டத் திற்கு முன்பாக புதியதாக பொறுப்பேற்ற பொறுப்பா ளர்கள்   மாவட்ட தலைவர் கு. சரவணன், ஜெயபாலன்,  பெ. கோவிந்தராஜ், மாவட்டத் துணை செயலாளர் சி.காமராஜ் ஆகியோர் கழகத் தோழர்களு டன்  இணைந்து  தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

மாவட்ட செயலாளர் பெ. கோவிந்தராஜ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். 

மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மா.செல்லதுரை கடவுள் மறுப்பு கூறினார். கழக காப்பாளர் அ.தமிழ்ச்செல்வன், பொதுக் குழு உறுப்பினர்கள் புலவர் இரா. வேட்ராயன், மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, மாநில கலைத் துறை செயலாளர் மாரி.கருணா நிதி, மண்டல ஆசிரியர் அணி அமைப்பாளர் இர. கிருஷ்ண மூர்த்தி, மாவட்ட பகுத்தறிவா ளர் கழக தலைவர் கதிர்செந்தில் ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றினர்.                              

ஈரோடு பொதுக்குழு, சென் னையில் நடைபெற்ற தலைமை செயற்குழு கூட்டத்தில் எடுக்கப் பட்ட முடிவுகள் குறித்தும், மாவட்டத்தில் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும், தமிழர் தலை வரின் ஆலோசனைகள் குறித் தும் திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் தொடக்க உரையாற்றினார். தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை.ஜெயராமன் சிறப்புரையாற்றி னார். 

மாவட்ட கழகத்திற்கு புதிய தாக நியமிக்கப்பட்ட மாவட்ட தலைவர் கு. சரவணன், பெ. கோவிந்தராஜ், மாவட்ட துணை செயலாளர் சி.காமராஜ் ஆகியோருக்கு தலைமைக் கழகம் சார்பாக மாநில ஒருங்கி ணைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன், தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை.ஜெய ராமன் ஆகியோர் பயனாடை அணிவித்து சிறப்பு செய்து வாழ்த்தினர். அதேபோல மற்ற அணிகளின் சார்பில் சிறப்பு செய்யப்பட்டது.

கருத்துரை

கலந்துரையாடல் கூட்டத் தில்  மேனாள்  மாவட்ட செய லாளர் பீம.தமிழ் பிரபாகரன்,  கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் த.அறிவரசன், மாவட்ட செயலா ளர் க.மாணிக்கம், நகர தலைவர் கரு.பாலன், வாசகர் வட்ட செயலாளர் சுதாமணி, மாவட் டத் தொழிலாளர் அணி. தலை வர் மு.சிசுபாலன், விடுதலை வாசகர் வட்ட பொருளாளர் இரா. பரிமளம், மகளிர் பாசறை செயலாளர் கோகிலா, அரூர் மாவட்ட மாணவர் அணி தலைவர் இ.சமரசம், காமலா புரம் ராஜா, மகளிர் அணி சங்கீதா, அரூர் மாவட்ட பகுத் தறிவாளர் கழக செயலாளர் ஜீவிதா ஆகியோர் கருத்துரை ஆற்றினர்.

விடுதலை சந்தா

திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த தொலைதொடர்புத் துறை அலுவலர் எஸ். சுரேசு, ஜெயந்தி, பா.நவீன்குமார் ஆகி யோர் இரண்டு  சந்தாக்களை மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.குணசேகரன், தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை ஜெயராமன் ஆகியோரிடம் வழங் கினர். சந்தா வழங்கிய தோழர் களுக்குச் சிறப்பு செய்யப்பட்டது.      தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை. ஜெயராமனின் தம்பி, திராவிட இயக்க கொள்கை யாளர், மார வாடி ஊமை. அர் ஜுனன் மறைவுக்கு மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

தீர்மானம்

ஈரோட்டில் நடைபெற்ற பொதுக்குழு, சென்னை நடை பெற்ற தலைமை செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை மாவட்ட திரா விடர் கழகம் செயல்படுத்துவது எனவும், மாதம் ஒருமுறை கலந்துரையாடல் கூட்டத்தை நடத்துவது எனவும், மற்றும் நூல் திறனாய்வு, கருத்தரங்கு நடத்துவது எனவும், தமிழ்நாடு இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறிக்கும்        அரசுடமை யாக்கப்பட்ட வங்கிகளை கண் டித்து 14ஆம் தேதி மாவட்ட தலைநகரில்  இளைஞரணி சார் பில்  கண்டன ஆர்ப்பாட்டத்தை சிறப்பாக நடத்துவது எனவும், மாவட்டத்தில் ஒன்றிய நகர அளவில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா, வைக்கம் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டங்களை சிறப் பாக நடத்துவது எனவும், கிரா மங்கள் முதல் ஒன்றிய, நகர, பகு திகளில் மற்றும் கழகத் தோழர் கள் இல்லங்களில் புதியதாக கழக  கொடிகளை ஏற்றுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் மேனாள் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் தீ.ஏங்கல்ஸ், மைக்கேல்ராஜ், காமலாபுரம்  சக்திவேல், காம ராஜ், சின்னசாமி, முருகன், சிவா னந்தம், பெருமாள் சிவசங்கர்,  பிரகாசம், தேவேந்திரன், பழைய தருமபுரி கோவிந்தராஜ், குமார், மாரவாடி தலைவர் ஊமை.காந்தி ச.கி.வீரமணி, பெரியார் பிஞ்சுகள் பகுத்தறிவு, தமிழினி, கலையரசன், பேரறிவாளன், யாழினி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இறுதியாக மாவட்டத் துணைச் செயலாளர் சி. காம ராஜ் நன்றி கூறினார். 

No comments:

Post a Comment