இதற்கு பெயர்தான் பாசிசம் - மணிப்பூர் கொடூரத்தை வீடியோ எடுத்தவர் கைது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 29, 2023

இதற்கு பெயர்தான் பாசிசம் - மணிப்பூர் கொடூரத்தை வீடியோ எடுத்தவர் கைது

இம்பால், ஜூலை 29  மணிப்பூர் மாநிலத்தில், கடந்த மே 4 அன்று பழங்குடியினப் பெண்கள் இரு வரை, ஆயிரக்கணக்கான ‘மெய் டெய்’ இளைஞர்கள் சேர்ந்து, நிர் வாணமாக இழுத்துச் சென்றதுடன், அவர்களைக் கும்பல் வல்லுறவுக் கும் உள்ளாக்கிய கொடுமை நடந் தது.  

இந்தச் சம்பவம் மிகவும் தாமதமாக கடந்த ஜூலை 19 அன்று தான் வெளி யுலகிற்குத் தெரியவந்தது. சமூக வலைத் தளத்தில் வெளியான அந்த காட்சிப் பதிவைக் கண்டு உலகமே அதிர்ந்தது. மனித சமூக மாக பிறந்த ஒவ்வொருவரையும் வெட்கித் தலைகுனிய வைத்தது. ஜூலை 19 அன்று வெளியான காட்சிப் பதிவால் துணிச்சல் பெற்ற வர்கள், இதுபோன்ற அரங்கேறிய வேறுபல கொடூரங்கள் தொடர் பான காட்சிப் பதிவுகள்,  ஒளிப்பட ஆதாரங்களையும் வெளியிட ஆரம் பித்தனர். 

இதனால், மணிப்பூரில் குக்கி பழங்குடி பெண்கள் அனுபவிக்கும் துயரங்கள், ஒவ்வொன்றாக வெளி யுலகிற்குத் தெரிய ஆரம்பித்தன.  இவை ஒன்றிய - மாநில பாஜக ஆட்சியாளர்களுக்கு நெருக்கடியாக மாறின இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி பதிலளிக்கக் கோரி, எதிர்க் கட்சிகள் நடத்தி வரும் போராட் டங்களால் நாடாளுமன்றம் கடந்த 7 நாட்களாக முடங்கிக் கிடக்கிறது.  இதனிடையே, பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு நீதி கிடைப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்காத மோடி அரசு, மணிப்பூர் உண்மை களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர்களைத் தேடிப் பழிவாங்கும் திட்டத்தைக் கையில் எடுத்தது. 

குறிப்பாக, பழங்குடி பெண்கள் கும்பல்  வல்லுறவுக்கு உள்ளாக்கப் பட்ட கொடூரத்தை வெளிச்சத் திற்குக் கொண்டுவந்த காட்சிப் பதிவு விவகாரம் தொடர்பாக சிபிஅய் விசாரணைக்கு உத்தர விட்டது. 

மணிப்பூர் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வும், இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யவும் ஒன்றிய அரசு முடி வெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. மணிப்பூர் வன்முறையோடு தொடர் புடைய 5-க்கும் மேற்பட்ட வழக்குகள்  ஏற்கெனவே சிபிஅய்யிடம் ஒப்படைக்கப் பட்டுள்ள நிலையில், காட்சிப் பதிவு விவ காரமும் சிபிஅய்யிடம் ஒப்படைக் கப்பட்டு உள்ளது. 

மேலும், இந்த வழக்கின் நீதிமன்ற விசாரணையை, அண்டை மாநில மான அசாமில் நடத்துவதற்கும் அனுமதி கேட்டு, ஒன்றிய அரசு, உச்சநீதிமன்றத்தை நாட உள்ளதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில்தான், குக்கி பழங்குடி பெண்கள் மீதான கும்பல்  வல்லுற வுக் கொடுமையை இரண்டு மாதங்கள் கடந்த நிலை யிலும்  வெளிச்சத்திற்கு கொண்டு  வந்த காட்சிப் பதிவை எடுத்தவரை, மோடி அரசு கைது செய்துள்ளது. அவர் இந்த காட்சிப் பதிவை எடுப்பதற்குப் பயன்படுத்திய அலை பேசியைப்  பறிமுதல் செய்துள்ளது


No comments:

Post a Comment