நான் இன்னும் சொல்கிறேன், இது வாரிசுகளுக்கான கட்சிதான்.
ஆமாம், வாரிசுகளுக்கான கட்சிதான். ஆரியத்தை வீழ்த்த வந்த திராவிடத்தின் வாரிசுகள் நாங்கள்! தந்தை பெரியாரின் வாரிசுகள்! பேரறிஞர் அண்ணாவின் வாரிசுகள்! தமிழினத் தலைவர் கலைஞரின் வாரிசுகள் நாங்கள்! இதனைத் தைரியமாக - பெருமையோடு என்னால் சொல்ல முடியும்.
பா.ஜ.க. யாருடைய வாரிசு? நான் கேட்கிறேன். கோட்சேவின் வாரிசுகள்தான் நீங்கள் என்று உங்களால் தைரியமாகச் சொல்ல முடியுமா? சொல்வதற்கான தைரியம் உங்களுக்கு உண்டா?
No comments:
Post a Comment