வார்டுகளில் தொடர்கூட்டங்கள் சேலம் மாநகர கலந்துரையாடலில் முடிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 14, 2023

வார்டுகளில் தொடர்கூட்டங்கள் சேலம் மாநகர கலந்துரையாடலில் முடிவு

சேலம், ஜூலை 14- சேலம் மாநகர கழக கலந்துரையாடல் கூட்டம்  மாவட்ட தலைவர் அ.ச. இளவழகன் இல்லத்தில் கழக காப்பாளர்  கே.ஜவகர் தலைமையில் தலைமைக்கழக அமைப்பாளர் எடப்பாடி கா.நா.பாலு முன்னி லையில் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் பா.வைரம், மாநகர செயலாளர் சி .பூபதி, மாநகர அமைப்பாளர் இராவணபூபதி, மாவட்டதுணைச்செயலாளர் போலீஸ் இராஜி, பொதுக்குழு உறுப்பினர்  கமலம், தொழிலாளர் அணி பொறுப்பாளர்கள் கணேசன், கருணாகரன், செல்வக்குமார், க. குமாரதாசு, சு.இமயவரம்பன், மாவட்ட இளை ஞரணி தலைவர்இ.தமிழர்தலைவர் வழக்கு ரைஞர் ஆர்.செல்வக்குமார், துரைமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றார்கள். 

சேலம் மாநகரத்தில் அய்ந்து பகுதி கழ கங்கள் புதியதாக உருவாக்கப்பட்டு பொறுப் பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

1. அம்மாப்பேட்டை பகுதி கழகம்

தலைவர்: க.குமாரதாசன், செயலாளர்: சு. இமயவரம்பன்

அம்மாப்பேட்டை பகுதி கழகத்திற்குட் பட்ட வார்டுகள் மொத்தம் 12 : 

(34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45.)

2. தாதகாபட்டி பகுதி கழகம்:

தலைவர்: இரா. வீரமணி, செயலாளர்: இராவண பூபதி

தாதகாபட்டி பகுதி கழகத்திற்குட்பட்ட வார்டுகள் மொத்தம் 11 : 

(46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56)

3. சூரமங்கம் பகுதி கழகம்:

தலைவர்: பழ. பரமசிவம், செயலாளர்:இரா. இராஜூ

சூரமங்கலம் பகுதி கழகத்திற்குட்பட்ட வார்டுகள் மொத்தம் 12 : 

(1, 2, 3, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26)

4. பொன்னமாப்பேட்டை பகுதி கழகம்:

தலைவர்:சு. தமிழ்ச்செல்வன், செயலாளர்: மோ. தங்கராஜூ

பொன்னமாப்பேட்டை பகுதி கழகத்திற் குட்பட்ட வார்டுகள் மொத்தம் 11 : 

(9, 10, 11, 12, 16, 17, 29, 30, 31, 32, 33) 

5. அஸ்தம்பட்டி பகுதி கழகம்:

தலைவர்: துரைமுருகன், செயலாளர்: மணிமாறன்

அஸ்தம்ட்டி  பகுதி கழகத்திற்குட்பட்ட வார்டுகள் மொத்தம் 14 :

( 4, 5, 6, 7, 8, 13, 14, 15, 27, 28, 57, 58, 59, 60)

சேலம் மாநகரில் திராவிடர் கழக அய்ந்து கிளைக் கழகங்கள் உதயம்

14ஆம் தேதி இளைஞரணி சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் பங்கேற்பது எனவும், அனைத்து வார்டு களிலும் தொடர்கூட்டங்கள் நடத்துவது எனவும், 

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களை அழைத்து அய்ந்து பகுதிகழகங்களில் கொடியேற்றுவது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

No comments:

Post a Comment