வெப்பநிலை உயர்ந்தால் மனிதர்களுக்கு வியர்வை வரும், அதே போல் கடுங்குளிர் என்றால் குளிர்வரும்.
இந்த நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த உணர் கருதி தயாரிக்கும் நிறுவனம் ஒன்று வியர்க்கும் மனித ரோபா ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது
உலகளவில் அதிகரிக்கும் வெப்பநிலையின் தாக்கத்தை வெளிப்படுத்துவதற்கு இயந்திர மனிதக் கருவி ஒன்றை உருவாக்கியுள்ளனர் ஆய்வாளர்கள். அமெரிக்காவின் அரிஸோனா ஸ்டேட் பல்கலைக் கழகத்தைச் (Arizona State University)
சேர்ந்த ஆய்வாளர்கள் இயந்திரத்தை உருவாக்கியுள்ளனர் அதனால் வேர்வை சிந்த முடியும்... மூச்சு விட முடியும்... நடுங்கமுடியும்... வெளிப்புறத்தில் இருக்கும்போது சுற்றுப் புறத்திலிருந்து உடலுக்குள் எவ்வளவு வெப்பம் செல்கிறது என்பதை மனிதக் கருவி கணக்கிடும்.
அதற்கு ஏற்றவாறும் அது செயல்படும். இயந் திரத்தின் முழுதும் பொருத்தப்பட்டுள்ள உணர் கருவிகள் வெப்பத்தைக் கண்காணிக்க உதவும். அதில் நிறுவப்பட்டுள்ள குளிரூட்டும் செயல்முறை இயந்திரம் ‘மூச்சு’ விடவும் வேர்வை சிந்தவும் வகைசெய்யும்.
மனிதர்களைப் போன்று முதுகிலிருந்தும் வேர்க்கக் கூடிய வகையில் இயந்திரம் கட்டப்பட்டுள்ளது. இயந்திரத்தை உருவாக்க அரை மில்லியன் டாலர் செலவானது. உடலில் அளவுக்கு அதிகமான வெப்ப நிலை பதிவாகும்போது (hyperthermia) என்ன நடக்கும் என்பதை இயந்திரம் எடுத்துக்காட்டும் என்று நம்பப்படுகிறது.
No comments:
Post a Comment