வல்லம், ஜூலை 1- பெரியார் மணி யம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) நாட்டு நலப்பணித் திட்டம், உலக போதை பொருள் ஒழிப்பு தினம் - 2023 முன்னிட்டு பல் வேறு நிகழ்ச்சிககளை நடத்தி , பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு போதைப் பொருட்கள் மற்றும் அதன் பாதிப்புகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் அதை மேற்கொள்வதற்கான வழிமுறைகள் பற்றிய விழிப் புணர்வு 26.06.2023 அன்று பல் கலைக்கழகத்திலுள்ள நுழைவா யில் வல்லம் பேருந்து நிலையம், வல்லம் சந்தை மற்றும் பல்கலைக் கழக நூலகம் மற்றும் கருத்தங்க கூடங்களிலும் நடைபெற்றது. குறிப்பாக
1. விழிப்புணர்வு பிரச் சாரம் - பல்கலைக்கழக வளாகம்
2. விழிப்புணர்வு பிரச் சாரம் - பேருந்து நிலையம், வல்லம்
3. விழிப்புணர்வு பிரச் சாரம் மற்றும் பேரணி வல்லம் சந்தை
4. விழிப்புணர்வு உரை - பல்கலைக்கழக அயன்ஸ்டின் அரங்கம்
5. ஓவியப் போட்டி - நூலகம், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்.
ஆகிய நிகழ்ச்சிகள் நடத்தப் பட்டன. ஏறக்குறைய 300, நாட்டு நலப்பணித்திட்ட தன் னார்வலர்கள், மாணவர்கள் பல்கலைக்கழக பணியாளர்கள் கலந்து கொண்டு பயனடைந் தனர்.
விழாவில் பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா.செ.சேலுச் சாமி, ஜோஸ்பின் செசேரா - (உதவி காவல் ஆய்வாளர் வல் லம்), பல்கலைக்கழக கல்விப்புல முதன்மையர் பேரா ஜார்ஜ், முனைவர் சந்திரகுமார் பீட்டர் (நாட்டு நலப்பணித்திட்ட ஒருங் கிணப்பாளர்), துறைத்தலைவர் முனைவர் டி.மகேஸ்குமார், வினோத் (காவல் துறை) ஆகி யோர் கலந்து கொண்டனர் .
"குடி குடியை கெடுக்கும்"", "புண்பட்ட மனதை புகைவிட்டு கெடுக்காதே" போன்ற பல்வேறு முழக்கங்களுடன் மாணவ, மாணவியர் நடத்திய விழிப் புணர்வு பேரணி மிகவும் பெரிய தாக்கத்தை இளைஞர்கள் மற் றும் மக்கள் மத்தியில் எற்படுத் தியது.
முனைவர் என்.லெனின் சொந்தமாக இயற்றி, ராகம் அமைத்த போதை விழிப்புணர்வு பாடலை பாடி மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். டி.நரேந்திர பிரசாத், டி.பார்கவி, எஸ்.பிரியா, எஸ்.அமர்நாத், முனைவர் எம். ஆனந்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலகப் பிரிவினர் இணைந்து நிகழ்ச் சியை ஒருங்கிணைத்திருந்தனர்.
No comments:
Post a Comment