பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய கழகக் கலந்துரையாடலில் முடிவு
பாப்பிரெட்டிபட்டி, ஜூலை 24- அரூர் கழக மாவட்ட பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய கழகக் கலந்துரையாடல் கூட்டம் 21.7.2023 அன்று பாப்பிரெட்டிப்பட்டி பெரியார் படிப்பகம் ஆசிரியர் கி.வீரமணி நூலகத்தில் நடைபெற்றது.
பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய கழக செயலாளர் நல்.ராஜா தலைமை தாங்கினார். நகர கழக செயலாளர் சக்திவேல் அனை வரையும் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் கருத்துரை வழங் கிய மாவட்ட தலைவர் தங்கராஜ் கழகத்தின் கட்டமைப்பை பலப் படுத்த அனைத்து தோழர்களும் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். வழிகாட் டல் உரை வழங்கிய மாநில கலைத்துறை செயலாளர் மாரி கருணாநிதி, அரூர் கழக மாவட் டம் உருவாக்கப்பட்டதன் நோக் கத்தையும், கழகம் ஏன் பலப் படுத்தப்பட வேண்டும் என்பதை யும், தமிழர் தலைவர் ஆசிரியர் தொடர்ச்சியாக சமூகப் பணியை 90 வயதிலும் ஆற்றுவதை சுட் டிக்காட்டி நம்முடைய பயணம், பணி எப்படி இருக்க வேண்டும் என்று விளக்கினார்.
மேலும் கழகக் கொடியேற்று தல், கிளைக் கழகங்களை வலுப்படுத்துதல், தெருமுனை பிரச்சார கூட்டங்கள் நடத்து தல் பற்றி திட்டங் களை எப்படி வகுக்க வேண்டும் என்று தெளிவு படுத்தினார்.
நிகழ்ச்சியில் இளைஞரணி பொறுப்பாளர்கள் சாய் குமார், அய்யனார் சிவானந்தம், ஆகி யோர் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற கலைத் துறையை சேர்ந்த பாடகர் ஜெயக்குமார், பெண்கள் கழக செயல்பாடுகளில் பங்கெடுப் பதை உறுதிப்படுத்த வலியுறுத் தினார்.
பகுத்தறிவாளர கழக ஒன்றிய தலைவர் ராஜ வேங்கன் கழக வரலாற்றை எடுத்துரைத்து கழ கப் பணியை சிறப்பாக நடத்திட வேண்டுகோள் விடுத்தார். கூட் டத்தில் கழக செயல்வீரர்கள் நாச்சியப்பன், அபிஸ் குமார், ராகுல் ராமமூர்த்தி, ஹரிஷ்,வான்மேகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றி யத்தில் 10 கிராமங்களில் கழகக் கொடி ஏற்றி தெருமுனைப் பிரச் சார கூட்டங்கள் நடத்துவது, கலைஞர் நூற்றாண்டு வைக்கம் நூற்றாண்டு விழாக்களை முன் னிட்டு பாப்பிரெட்டிப்பட்டியில் பொதுக்கூட்டம் நடத்துவது, கழகத் தோழர்கள் பட்டியலை தயாரித்து முறைப்படுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
No comments:
Post a Comment