பா.ஜ.க. முதலமைச்சரை விமர்சித்த பழங்குடி மாணவர் படுகொலை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 27, 2023

பா.ஜ.க. முதலமைச்சரை விமர்சித்த பழங்குடி மாணவர் படுகொலை

இம்பால், ஜூலை 27 - மணிப்பூர் மாநிலத்தில் இரண்டரை மாதங்க ளுக்கும் மேலாக நடை பெற்றுவரும் வன்முறை, இதுவரை 165-க்கும் அதிகமானோரின் உயிரை பறித் துள்ளது. ஆயிரத்திற்கும் மே ற்பட் டோர் காயம் அடைந் துள்ளனர். 

தீவைப்புச் சம்பவங்களால் வீடு, வாகனம், கடைகள் உள்ளிட்ட உடைமைகளை இழந்த 60 ஆயிரத் திற்கும் மேற்பட்டோர் சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கப் பட்டு முகாம்களில் தஞ்சம் அடைந் துள்ள அவலநிலை ஏற்பட்டுள்ளது.

இதனிடையே , கடந்த ஜூலை 19 அன்று வெளியான காட்சிப் பதிவு, மணிப்பூர் வன்முறைச் சம் பவங்களின் ஒருபகுதியாக, குக்கி பழங்குடி பெண்கள் பலர், கும்பல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப் பட்ட கொடூரத்தை வெளியுலகிற்கு கொண்டு வந்தது. முதலில் 2 பெண் கள் நிர்வாணமாக இழுத்துச் செல் லப்பட்ட  காட்சிப் பதிவு வெளி யான நிலையில், தற்போது பெண் களுக்கு இழைக்கப்பட்ட மேலும் பல கொடுமைகள் தெரிய வந் துள்ளன.

மொத்தம் 12-க்கும் மேற்பட்ட பெண்கள் - குழந்தைகள் கும்பல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப் பட்டு இருக்கின்றனர் என்ற உண்மை வெளியாகியுள்ளது. 

இவற்றில் பெரும்பாலானவை, கலவரத்தின் ஆரம்ப நாட்களான மே  மாதத்திலேயே நடந்தவை என்பதும், 2 மாதங்களுக்குப் பிறகே  அவை தற்போது ஒவ்வொன் றாக வெளிவருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. 

அதேபோன்று, வன்முறை தொடங்கிய மே மாதம் முதல் வாரத்தில், காவல்துறை காவலில் இருந்த  குக்கி சமூகத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவரை, கும்பல் ஒன்று அடித்தே கொலை செய்த சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

சூரசந்த்பூரில் உள்ள கல்லூரி யில் பி.ஏ. புவியியல் படித்து வரு பவர் ஹங்லா ல் முவான் வை பேய். 21 வயதேயான இவர், குக்கி இன மக்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் மெய்தி வகுப்பை ச் சேர்ந்த பா.ஜ.க. அரசியல்வாதிகளையும், முதலமைச்சர் பைரேன் சிங்-கை யும் விமர்சித்து, தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டதாக கூறப் படுகிறது. இதற்காக காவல்துறையினர் அவரை கைது செய்து, மே 4 அன்று நீதிபதி முன்பாக  ஆஜர் படுத்திவிட்டு சஜிவா சிறைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். 

அப்போது சுற்றி வளைத்த 800 பேர் கொண்ட கும்பல், மாணவர் ஹங்லால் முவான் வைபேயைக் கண்மூடித்தனமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், குக்கி மாண வர் கொடூரமாக அடித்தே கொலை செய்யப்பட்டுள்ளார். 

அந்த இளைஞரின் உடலைக் கூட பெற்றோர் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனி டையே , முதல் தகவல் அ றிக்கை பதிவுசெய்த பொரம்பட் காவல் நிலைய காவல்துறையினர், உண் மையை மறைத்து, மாணவர் ஹங் லால் முவான் வைபேய் காவலில் மரணம் என்பதாகத் தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment