அறிவியல் ஆராய்ச்சியை ஒழித்துக்கட்ட மோடி அரசு திட்டமா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 15, 2023

அறிவியல் ஆராய்ச்சியை ஒழித்துக்கட்ட மோடி அரசு திட்டமா?

காங்கிரஸ் தலைவர் கார்கே குற்றச்சாட்டு

புதுடில்லி, ஜூலை 15- அறிவியல் ஆய்வாளர்களுக்கு நிதி ஒதுக்க தாமதிக்கும் மோடி அரசு, அறிவியல் ஆராய்ச்சியை ஒழித்துக்கட்ட திட்டமிட்டு இருப்பதாக மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டினார்.  

நாட்டின் முன்னணி ஆராய்ச்சி நிறுவனங்களில் பணியாற்றும் ஆய்வாளர்களுக்கு வழக்கமாக ஏப்ரல் மாதம் ஆராய்ச்சிக்காக ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு செய்யும். ஆனால், இந்த ஆண்டு இன்னும் நிதி ஒதுக்க வில்லை என்றும், நிதியை எதிர்பார்த்து அறிவியல் ஆய் வாளர்கள் காத்திருப்பதாகவும் ஊடகங்களில் தகவல் வெளியானது. இந்நிலையில், இதை சுட்டிக்காட்டி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது 'டுவிட் டர்' பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- 

முன்னணி ஆராய்ச்சி நிறுவனங்களில் பணியாற்றும் அறிவியல் ஆய்வாளர்களுக்கு மோடி அரசு இன்னும் நிதி ஒதுக்காததால், அவர்கள் தங்கள் சேமிப்பு தொகையில் இருந்து ஆராய்ச்சிக்கு செலவழிக்கும் நிலைக்கு தள்ளப் பட்டுள்ளனர். மேலும், திட்ட ஊழியர்களுக்கு 3 மாதங் களாக ஊதியம் தரப்படவில்லை. அதனால் அவர்களுக்கு விஞ்ஞானிகளே தங்கள் சொந்த பணத்தை அளிக்கும் நிலை உள்ளது. தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை அமைத்து அதிக நிதி ஒதுக்குவதாக உறுதி அளித்த மோடி அரசு, அதை நிறைவேற்றவில்லை. இவற்றையெல்லாம் பார்த்தால், நாட்டில் அறிவியல் ஆராய்ச்சியை ஒழித்துக் கட்ட மோடி அரசு உறுதி பூண்டிருப்பது தெளிவாகிறது. இதனால் நாட்டின் முன்னேற்றம் தடைபடும். நடப்பு ஆண்டு நிதிநிலை அறிக்கையிலும் அறிவியல் ஆராய்ச் சிக்கான நிதியை 6.87 சதவீதம் குறைத்துள்ளது. 

2017ஆம் ஆண்டு, அறிவியல் ஆய்வாளர்கள் தங் களது கவலைகளை தெரிவித்து 27 நகரங்களில் நாடு தழுவிய போராட்டம் நடத்த வேண்டி இருந்தது. 2015ஆம் ஆண்டு கூட, அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், சொந்த நிதியில் திட்டங்களை தொடங்கு மாறு மோடி அரசு கேட்டுக்கொண்டது. இப்போதும் அறி வியல் ஆய்வாளர்களுக்கு எதிராக முற்றிலும் அலட்சிய மாகவும், அவமதிப்பாகவும் நடந்து கொள்கிறது. 'ஜெய் விஞ்ஞான், ஜெய் அனுசந்தான்' என்று பிரதமர் மோடி பேசி இருக்கலாம். ஆனால், உண்மையில் அவரது அரசின் விருப்பம், "அறிவியலைத் தோற்கடி, ஆராய்ச் சியை தோற்கடி" என்பதாகத்தான் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment