திண்டுக்கல், ஜூலை 21 தமிழ்நாட்டில் மீண்டும் சட்டமன்ற தேர்தல் நடத்தினால், 234 தொகுதிகளிலும் டெபா சிட் இழக்க வைத்து, மு.க.ஸ்டாலினை நாங்கள் மீண்டும் முதலமைச்சராக்கு வோம். உங்கள் ஆட்சியை யாரும் கலைக்கமாட்டார்கள், என அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சி.சீனி வாசன் பேசினார்.
திண்டுக்கல் மாவட்ட அதிமுக சார்பில் விலைவாசி உயர்வை கட்டுப் படுத்தாத மாநில அரசை கண்டித்து திண்டுக்கல் நகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் அதி முக மாநிலபொருளாளர், மேனாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தலைமை வகித்து பேசுகையில், "வழக்குகளை போட்டு அதிமுகவை முடக்கிவிடலாம், இந்த கட்சியை அழித்துவிடலாம் என நினைத்தார்கள். அத்தனையையும் எதிர்கொண்டு வெற்றிபெற்று தேர்தல் ஆணையத்தில் அதிமுக, இரட்டை இலை எடப் பாடியாருக்கு தான் சொந்தம் என்றும் பெற்றுள்ளார். இன்று ஓ.பன்னீர் செல்வம் கொடநாடு பிரச்சினையை கிளப்புகிறார். அதற்காக போராட் டத்தை நடத்துவதாக அறிவித்துள்ளார். அதை எடப்பாடியும், நாமும் செய்ததைபோல் சொல்கிறார். மகளிர் உரிமைத்தொகை அனைத்து மகளி ருக்கும் தருவோம் என்று சொல்லி விட்டு தற்போது நிபந்தனைகளை விதிக்கிறார்கள்.
தற்போதே தமிழ்நாட்டில் மீண்டும் சட்டமன்ற தேர்தல் நடத்தினால், 234 தொகுதிகளிலும் டெபாசிட் இழக்க வைத்து மு.க.ஸ்டாலினை நாங்கள் மீண்டும் முதலமைச்சராக்குவோம் உங்கள் ஆட்சியை யாரும் கலைக்க மாட்டார்கள். இன்னும் 3 ஆண்டுகள் இருக்கிறது. மக்களை நன்றாக கொடுமைப்படுத்துங்கள். என்று பேசினார். மு.க.ஸ்டாலினை மீண்டும் முதல மைச்சர் ஆக்குவோம் என்று அதிமுக வின் முக்கிய தலைவரே பேசியதைக் கண்ட அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர்.
No comments:
Post a Comment