கருநாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட உபரிநீர், மேட்டூர் அருகே அடிப்பாலாறுக்கு நேற்று வந்து சேர்ந்தது. இதை நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இதனிடையே, அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 119 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 177 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு வந்தது. தற்போது, டெல்டா மாவட்டங்களில் பாசனநீர் தேவை அதிகரித்துள்ளதால், அணையில் இருந்து நேற்று காலை 8 மணி முதல் விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டுஉள்ளது.
குறையும் நீர்மட்டம்
அணைக்கு வரும் நீரின் அளவை விட, பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. நீர்மட்டம் 65.80 அடியாகவும், நீர் இருப்பு 29.19 டிஎம்சியாகவும் இருந்தது.
No comments:
Post a Comment