மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 13, 2023

மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தல்

திரிணாமுல் காங்கிரசுக்கு வெற்றி மேல் வெற்றி

கொல்கத்தா, ஜூலை 13 மேற்கு வங்காளத்தில் பயங்கர வன்முறைக்கு இடையே நடந்த உள்ளாட்சி தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 35 ஆயிரத்துக்கு மேற்பட்ட இடங்களை கைப்பற்றி உள்ளது. 

திரிணாமுல் காங்கிரஸ் ஆளும் மேற்கு வங்கா ளத்தில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 8-ஆம் தேதி தேர்தல் நடந்தது. தேர்தல் அறிவிக்கப்பட்டது முதலே இந்த உள் ளாட்சி தேர்தல் களம் பெரும் வன்முறை சம்பவங்களை சந்தித்தது. இதில் உச்சபட்சமாக வாக்குப்பதிவு நாளான கடந்த 8-ஆம் தேதி நடந்த வன்முறையில் சுமார் 20 பேர் உயிரிழந்தனர்.இவ்வாறு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்த இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் 11.7.2023 அன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

இதில் தொடக்கம் முதலே ஆளும் திரிணா முல் காங்கிரசின் கையே ஓங்கி இருந்தது. ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி என அனைத்து பிரிவுகளிலும் பெரும்பாலான இடங் களில் இந்த கட்சியின் வேட்பாளர்களே வெற்றி பெற்றிருந்தனர். திரிணாமுல் காங்கிரசின் இந்த வெற்றி முகம் நேற்றும் 2ஆ-வது நாளாக தொடர்ந்தது. நேற்று மாலை 4.30 மணி நிலவரப்படி, மொத்த முள்ள 63,229 கிராம ஊராட்சி வார்டு களில், 34,901 இடங்களை திரிணாமுல் காங்கிரஸ் கைப்பற்றி இருந்தது. அத்து டன் 613 வார்டுகளில் முன்னிலையில் இருந்தது. எதிர்க்கட்சியான பா.ஜனதா, 2ஆ-ம் இடத்தை பெற்றிருந்தது. அந்த கட்சி வேட் பாளர்கள் 9,719 வார்டுகளை கைப்பற்றி, 151 இடங்களில் முன்னணியில் இருந்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 2,938 இடங்களில் வெற்றியும், 67 இடங்களில் முன்னிலையிலும் இருந்தது. காங்கிரஸ் கட்சி 2,542 இடங்களில் வெற்றியும், 66 வார்டுகளில் முன்னிலையும் பெற்றிருந்தது.

இதைப்போல ஊராட்சி ஒன்றிய தேர்தலிலும் ஆளுங்கட்சியின் கையே ஓங்கியிருந்தது. மொத்தமுள்ள 9,728 வார்டுகளில் இந்த கட்சி வேட்பாளர்கள் 6,430 இடங்களை கைப்பற்றி இருந்தனர். 193 வார்டுகளில் முன்னிலையிலும் இருந்தனர். பா.ஜனதா 982 வார்டுகளில் வெற் றியும், 53 இடங்களில் முன்னிலையும் பெற்றி ருந்தது. 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வெற்றி 176, முன்னிலை 14 என்ற நிலையில் இருந்தது. காங்கிரஸ் கட்சி 266 இடங்களில் வெற்றி, 6 வார்டுகளில் முன்னிலை என்றிருந்தது.

மேலும் 928 மாவட்ட ஊராட்சி வார்டுகளில் திரிணாமுல் காங்கிரஸ் 674 இடங்களும், பா.ஜனதா 21 இடங்களும் பெற்றிருந்தன.  

 

No comments:

Post a Comment