புதுடில்லி,ஜூலை5- தலைநகர் டில்லியில் மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் மோசடியில் ஈடுபட்டதாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீட் தேர்வை எழுதுவதில் ஆள்மாறாட்டம் செய்ததாக டில்லி காவல்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், 2 மாணவர்களை கைது செய்து விசாரித்து வருவதாக டில்லி காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
மருத்துவப் படிப்பு என்பது பல மாணவர்களின் கனவாக இருந்துவரும் நிலையில், வருடாவருடம் இது போன்ற ஆள்மாறாட்டம் நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது.
நீட் தேர்வு எழுதுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. நீட் தேர்வில் பங்கேற்பதற்கு முன்பாக பல்வேறு கட்ட சோதனைகள் நடைபெற்ற பின்னரே மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நுழைவுத்தேர்வை எழுத அனுமதிக்கப்படுகிறது.
இருப்பினும், ஆள்மாறாட்டம் போன்ற மோசடிகள் தொடர்ந்து நிகழ்ந்து வரும் ஒன்றாக உள்ளது. இதுதொடர்பாக ஆந்திரம், உ.பி. ஆகிய மாநிலங்களில் ஒரு கும்பலே செயல்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment