மணிப்பூர் கிராமத்தை சூறையாடியது ஆயிரம் பேர் கும்பல்
முதல் தகவல் அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள்
இம்பால், ஜூலை 22 மணிப் பூரில் பழங்குடியின பெண்கள் இருவரை நிர்வாணப்படுத்தி வீதியில் ஊர்வலமாக அழைத்துச் சென்ற கொடூரத்தை நிகழ்த் துவதற்கு முன்பு, காங்போக்பி மாவட்டத்திலுள்ள அந்தக் கிராமத்துக்கு வந்த ஆயுத மேந்திய கும்பல், வீடுகளை கொள்ளையடித்து, தீ வைத்து, பெண்களை பாலியல் வன் கொடுமை செய்து, பலரைக் கொலை செய்தது என்று காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட எஃப்.அய்.ஆர். எனப்படும் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களை நிர்வாணப் படுத்தி அழைத்துச் செல்வதற்கு முன்பாக, அதில் ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டபோது, அதைத் தடுக்க முயன்ற அவருடைய அண்ணனை அந்தக் கும்பல் அடித்துக் கொன்றதாகவும் அந்த முதல் தகவலறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், "ஏகே ரக துப்பாக்கி, எஸ்எல்ஆர் (தனியங்கி துப் பாக்கி), அய்என்எஸ்ஏஎஸ் மற்றும் 303 ரைபிள் போன்ற நவீன ரக ஆயுதங்களுடன் சுமார் 900 முதல் 1000 பேர் கொண்ட கும்பல் ஒன்று எங்கள் கிராமத் துக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்தது. சைகுல் காவல் நிலையத்தில் இருந்து 68 கி.மீ. தொலைவில் காங்போக்பி மாவட்டத்தில் ஒரு தீவு போல ஒதுங்கி இருக்கிறது அந்த கிராமம். அந்த வன்முறைக் கும்பல் எல்லா வீடுகளையும் சேதப் படுத்தி, அதிலிருந்த அசையும் சொத்துகளை சூறையாடி, பின்னர் தீ வைத்தது. பணம், வீட்டு உபயோக பொருள்கள், மின் சாதனங்கள், தானியங்கள், கால்நடைகளை அந்தக் கும் பலில் இருந்தவர்கள் எடுத்துச் சென்றனர். அந்தக் கும்பல் அருகில் உள்ள காட்டில் இருந்து காவல்துறையினரால் மீட்கப்பட்ட 5 பேரைக் கடத் திச் சென்றது" என்று அந்த முதல் தகவலறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது.
பெண்களை நிர்வாணப் படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்ற காட்சிப் பதிவு வெளி யாகி நாட்டை அதிர்ச்சிக் குள்ளாக்கியதைத் தொடர்ந்து, அந்தச் சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கொடூர சம்பவம் மே 4-ஆம் தேதி நடந்தது. இது தொடர்பாக ஜூன் 21-ஆம் தேதி சைகுல் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட் டுள்ளது.
ராணுவ வீரரின் கதறல்
இதனிடையே, ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட இரண்டு பெண்களில் ஒருவரது கணவர் கார்கில் போரில் போராடிய ராணுவ வீரர். உள்ளூர் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் கூறும் போது,
"நான் கார்கில் போரில் போராடியவன். அதேபோல் இலங்கைச் சென்ற இந்திய அமைதிக் குழுவில் இருந்திருக் கிறேன். நாட்டைப் பாதுகாக்க முடிந்த என்னால் என் மனை வியையும், என் சக கிராமத்தின ரையும் காப்பாற்ற முடியவில் லையே" என்றார் வேதனையாக.
மேலும் அவர், “துக்ககரமான அந்த மே 4ஆ-ம் தேதி கிராமத்தில் பல வீடுகளை எரித்து இரண்டு பெண்களை நிர்வாணப்படுத்தி கிராமத்து சாலையில் பலர் முன்னிலையில் ஊர்வலமாக அழைத்து சென்றது. இந்தச் சம்பவங்கள் நடக்கும்போது காவல்துறையினர் அங்கே இருந்தனர்.
ஆனால் எதுவும் செய்யவில்லை. வீடுகளுக்கு தீ வைத்து பெண்களிடம் மனிதா பிமானம் இல்லாமல் நடந்து கொண்டவர்களுக்கு முன்மா திரியான தண்டனை வழங்கப் பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்றார்.
மகளிர் ஆணையம்
இதனிடையே, மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான வன் முறைகள் குறித்து கடந்த மூன்று மாதங்களில் 3 முறை அம்மாநில அதிகாரிகளிடம் புகார் அளித்தும், அவர்களிடமிருந்து எந்தவிதமான பதிலும் வர வில்லை என்று தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மா தெரிவித்தார்.
திரிணமூல் காங். எழுப்பிய கேள்வி
மணிப்பூர் வன்கொடுமையில் 78 நாட்களாக காவல்துறையினர் காத்திருக்க யார் காரணம்?
சமூக வலைதளங்களில் காட்சிப் பதிவு வெளியாகி வைர லாகும் வரை சம்பந்தப்பட்ட நபர்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்காத காரணம் தொடர்பாக கேள்விகளை அடுக்கியுள்ளார் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சாகெட் கோகலே
இந்தச் சூழலில், மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொடூர வன் முறைக்கு எதிராக நாடு முழு வதும் பல்வேறு தரப்பினரும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment