சென்னை, ஜூலை 15 - அரசுடைமையாக்கப்பட்ட வங்கிப் பணிகளில் தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலை வாயப்பு பறிக்கப்படுவதைக் கண்டித்தும், தமிழ்நாட்டின் வேலை வாய்ப்புகளை தமிழர்க்கென்று உறுதிப்படுத்து என்ற முழக்கத்துடலும் திராவிடர் கழக இளைஞரணி சார்பில் ஒன்றிய பா.ஜ.க. அரசை கண்டித்து நேற்று (14.7.2023) காலை தமிழ்நாடெங்கும் மாபெ ரும் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கழகத் துணைத் தலைவரின் கண்டன உரை
சென்னை மாவட்ட ஆட்சியர் அலு வலகம் அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன் அவர்கள் கண்டன உரையாற்று கையில்:
அஞ்சல் துறையில் அகில இந்திய அளவிலே ஒரு தேர்வு நடைபெற்றது. வடமாநிலத்தைச் சேர்ந்த 25 பேர் தமிழ் தேர்வில் 25க்கு 25 மதிப்பெண் பெற்றி ருந்தனர். ஒரு தோழர் எப்படியோ ஒரு வட மாநிலத்தவரின் எண்ணைப் பிடித்து அரியானாவைச் சேர்ந்த வெற்றி பெற்ற ஒருவரிடம் தொலைப்பேசியில் பேசியிருக்கிறார். அரியானாக்காரர் ஹிந்தியில் பேசியிருக்கிறார். இவர், You have got 25, out of 25 in Tamizh. do you speak Tamizh?' என்று கேட்டிருக்கிறார். அதற்கு அரியானாக்காரர். I can't speak Tamizh என்று சொல்லியிருக்கிறார். தமி ழில் தேர்வானவருக்கு தமிழ் தெரியா தாம்? ஆனால், 25 க்கு 25 மதிப்பெண் தமிழில்? இலக்கணமும் அதில் உண்டு.
- தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை இல்லாமல் துன்பப் பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். ஒன்றிய அரசு நம்மை சோதிக்கிறது. அம்பேத்கர், ’மக்கள் தங்களின் விகிதாச்சார அளவில் அவர்களுக்குரிய பங்கை பெறாவிட்டால், அவர்கள் கிளர்ந்து எழுவார்கள்’ என்று சொன்னார். அதை நினைவில் கொள்ளுங் கள். குட்டக்குட்ட குனிந்து கொண்டே இருக்க மாட்டார்கள். எழுச்சி, எரிமலை யாக வெடிக்கத்தான் போகிறது.
- நீதிக்கட்சியின் பனகல் அரசர் காலத் தில், அரசு தேர்வாணையம் கொண்டு வரப்பட்டது. ஜெயலலிதா உடல்நலம் சரியில்லாமல் இருந்த நேரத்தில் ஓ.பன் னீர்செல்வம் முதலமைச்சராக இருந்தார், அவர் ’தமிழ்நாடு தேர்வு ஆணையம் நடத்தும் தேர்வுகளை இந்தியாவிலுள்ள எந்த மாநிலத்தவர்களும் எழுதலாம். என்று ஒரு அரசு ஆணையைப் பிறப் பித்தார். இப்படி மாற்றியதன் விளைவாக, ’பாண்டியனா, யோஜனா, நிம்மலா, மோகன், சந்தோஷ், தாஸ், குருபிரசாத் ரெட்டி, ராமு சுப்ப ரெட்டி, நாகேஸ்வர சென்னா, சாய்பாபா, ஜீவன்குமார் போன் றவர்களெல்லாம் தமிழ்நாட்டில் மின்சார வாரியத்தில் உதவிப்பொறியாளர்களாக இன்று பணியாற்றுகிறார்கள். எப்படி? ஓ.பி.எஸ். முதலமைச்சராக இருந்தபோது போட்ட அரசு ஆணை தான் காரணம்.
- இனிமேலும் நாம் இதில் கவனம் செலுத்தவில்லை என்றால் தமிழ்நாடு தமிழ்நாடாக இருக்காது என உரையாற் றினார்.
பங்கேற்றோர்
இந்த ஆர்ப்பாட்டத்தில் கமலேஷ், யுகேஷ், சி.வெற்றிச்செல்வி, அரும்பாக்கம் தாமோதரன், புரசை சு.அன்புச்செல்வன், பெரியார் நூலக வாசகர் வட்டம் ஜனாத்தனன், பெரியார் நூலக வாசகர் வட்டம் செல்லப்பன், சிவா, திருவொற்றியூர் சு.செல்வம், திருவொற்றியூர் ராஜேந்திரன், சிவக்குமார், சிறீதர், அஜந்தா, பூவை செல்வி, தொண்டறம், தங்க.தனலட்சுமி, கலைமணி, கொடுங்கையூர் தங்கமணி, படப்பை செ.சந்திரசேகர், மா.குணசேகரன், துரைராசு, செல்வக்குமார், சீர்காழி ராமண்ணா, தாம்பரம் லட்சுமிபதி, பெரியார் யுவராஜ், பா.பாலு, கணேசன், உடுமலை வடிவேல், துரை.ராவணன், ராஜவர்ணன், தமிழினியன், மகேந்திரன், பிரபாகரன், மோகன்ராஜ், ஆனந்தி, பா.வெற்றிச்செல்வி, அன்புமணி, தே.ஒளி வண்ணன், பெரியார் செல்வி, ஆ.வெங்கடேசன், பார்த்தசாரதி, சேகர், கொளத்தூர் கோபால், தி.செ.கணேசன், அருணா, சேரலாதன், தமிழ்ச்செல்வன், வேலுச்சாமி, வினோதா, மு.இரா.மாணிக்கம், பெரியார் மாணாக்கன், சோமசுந்தரம், பாண்டு, ராவணன், காமராஜ், பொழிசை கண்ணன், தாம்பரம் சுரேஷ், சூளைமேடு (பிடிசி) ராஜேந்திரன், ஆலத்தூர் செல்வராஜ்,
திருவொற்றியூர் மாவட்டம்
புதுவண்ணை செல்வம், திருவொற்றியூர் பாலு, மாணிக்கம், முரசு, கவுதமன், மாவட்டத் தலைவர் வெ.மு.மோகன், செயலாளர் செ.ஒளிவண்ணன், நகர செயலாளர் இராசேந்திரன்.
No comments:
Post a Comment