கல்வி நிறுவனங்களில் டெங்கு பரவல் தடுப்பு நடவடிக்கை - சுகாதாரத் துறை இயக்குநர் அறிவுறுத்தல் - Viduthalai

சுடச்சுட

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 1, 2023

கல்வி நிறுவனங்களில் டெங்கு பரவல் தடுப்பு நடவடிக்கை - சுகாதாரத் துறை இயக்குநர் அறிவுறுத்தல்

17

சென்னை, ஜூலை 1- பள்ளி, கல்வி நிறுவனங்களில் டெங்கு பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பொது சுகா தாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் அறிவுறுத்தியுள்ளார்.

கேரளாவில் தற்போது எலிக் காய்ச்சல் மற்றும் டெங்கு பாதிப்பு தீவிரமாக பரவி வருகிறது. அந்த மாநிலத்தில் உள்ள மருத்துவமனை களின் காய்ச்சல் வார்டுகளில் படுக் கைகள் அனைத்தும் நிரம்பும் நிலை ஏற்பட்டுள்ளது. 

இதையடுத்து, தமிழ்நாடு எல்லையோர மாவட்டங்களில் மருத்துவக் கண்காணிப்பை பொது சுகாதாரத் துறை தீவிரப்படுத்தியது. தேவையான இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடத்தவும் உத்தர விட்டது.

இந்நிலையில், பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்களுக்கான சிறப்பு அறிவுறுத்தல்களை பொது சுகா தாரத் துறை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட சுகாதாரத் துறை அலு வலர்களுக்கும் பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

மாநிலத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரி வளா கங்களில் கொசு உற்பத்தியாகாமல் தடுப்பதற்கான ஆய்வை முன் னெடுத்து அதனை ஒழிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

அதற்கான ஒத்துழைப்பை கல்வி நிறுவன நிர்வாகங்களும், உள்ளாட்சி அமைப்புகளும் அவ சியம் வழங்க வேண்டும். பள்ளி வளாகம் முழுவதும் கொசுப் புகை மருந்து அடிக்க வேண்டும்.

அதேபோல, மேல்நிலை மற் றும் கீழ்நிலை தொட்டிகளை சுத்தமாகவும், குளோரின் கலந்தும் பராமரிக்க வேண்டும். கொசுப் புழுக்கள் அங்கு உற்பத்தியாகாத வகையில் மூடி வைப்பது முக்கியம். மாணவர்களுக்கு காய்ச்சல் பாதிப் புகள் கண்டறியப்பட்டால் உடன டியாக துணை சுகாதார இயக்குநர் களுக்கு தகவல் தெரிவிக்க வேண் டும். அதன்பேரில் சிறப்பு முகாம் கள் உள்ளிட்ட தடுப்பு நடவடிக் கைகள் முன்னெடுக்கப்பட வேண் டும். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

No comments:

Post a Comment