அனைத்து மாவட்டங்களிலும் மதுவால் பாதிக்கப்பட்டோருக்கு மறுவாழ்வு மய்யம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 18, 2023

அனைத்து மாவட்டங்களிலும் மதுவால் பாதிக்கப்பட்டோருக்கு மறுவாழ்வு மய்யம்

 அமைச்சர் சு.முத்துசாமி அறிவிப்பு

ஈரோடு,ஜூலை18- ஈரோட்டில் அமைச்சர் சு.முத்துசாமி நேற்று (17.7.2023) செய்தியாளர்களிடம் கூறியதாவது: 

180 மில்லியைவிட குறைவான அள வில் மது விற்பனை செய்ய வேண்டும் என உடல் உழைப்பு தொழிலாளர்கள் விரும்புகின்றனர். எனவேதான், 90 மில்லி அளவில், டெட்ராபேக்கில் மது விற்பனை செய்யலாமா என ஆய்வு மட்டுமே செய்யப்பட்டது.

காலையில் 7 முதல் 9 மணி வரை வேலைக்கு செல்லும், மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள், தவறான இடத் துக்கு செல்லக்கூடாது என்பதற்காகவே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மதுவால் பாதிக்கப்பட்டோர் மீட்பு மற்றும் மறுவாழ்வு மய்யங்கள் மாவட் டம்தோறும் அமைக்கப்படும் என்றார்.

இதேபோன்று கோவையில் பேசிய அவர், காலை நேரத்தில் மது அருந்து பவர்களை குடிகாரர்கள் என்று கூறி னால் அதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. காலை நேரத் தில் சாக்கடை சுத்தம் செய்தல் உள் ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் தொழிலாளர்கள் மது அருந்துவதை தவிர்த்து நல்வழிப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். இதற்கான யோசனைகள் வரவேற்கப்படுகின்றன. டாஸ்மாக் வருமானத்தை உயர்த்த வேண்டும் என்ற எண்ணம் இல்லை என்றார்.

No comments:

Post a Comment